வியாழன், 7 நவம்பர், 2019

ஸ்டாலின் வேண்டுகோள் : மாபா பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள்


மாலைமலர் : அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள் -
சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கருத்து கூறி இருந்தார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திடுங்கள். அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம். இழி சொற்களை ஏற்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக