வியாழன், 7 நவம்பர், 2019

வார்டனை 15 முறை கத்தியால் குத்திய 19 வயது திருச்சி கல்லூரி மாணவன் கைது!

incident in duraiyoor... police investigation nakkheeran.in - ஜெ.டி.ஆர் : திருச்சி துறையூர் கண்ணனூர் பகுதியில் உள்ளது இமயம் வேளாண்மை கல்லூரி. இந்த கல்லூரியில் பொள்ளாட்சியில் இருந்து வெங்கட்ராமன் என்பவர் கடந்த 15 வருடமாக கல்லூரி விடுதியில் வார்டனாக இருக்கிறார்.
இந்த கல்லூரியில் பெரம்பலூர் குன்னம் பகுதியிலிருந்து அப்துல் ஹக்கீம் என்கிற மாணவன் வேளாண்மைதுறையில் இரண்டாம் ஆண்டு வகுப்பில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறான். வெளியூரில் இருந்து தங்கி படிக்கும் அப்துல் ஹக்கீம் சமீப காலமாக கல்லூரிக்கு அடிக்கடி விடுமுறை எடுப்பதும் கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார். இதை கண்காணித்த விடுதி வார்டன் வெங்கடன்ராமன் மாணவர் ஹக்கீம் அப்பா அப்துல் ரகுமானுக்கு உங்கள் பையன் கல்லூரிக்கு வருவதில்லை என்பதை சொல்லியிருக்கிறார்.


சில நாட்கள் கழித்து கல்லூரி விடுமுறையை என்று ஹக்கீம் வீட்டிறகு சென்றபோது அவருடைய அப்பா கடுமையாக கோவப்பட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு பணம் செலவு பண்ணி படிக்க வைக்கிறோம் இப்படி பண்ணிகிட்டு உன்னை என்ன பண்றது. உன்னை படிக்க வச்ச என்னை தான்  அடிக்க வேண்டும் என்று சொல்லி அங்கிருந்த காலணியை எடுத்து தனக்கு தானே அடித்துக்கொண்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத மாணவன் ஹக்கீம் அதிர்ச்சியாகி அங்கிருந்து வெளியேறினார்.

அப்பாவை என் முன்னாலே காலணியால் தனக்கு தானே அடிக்க வைத்து விட்டாரே இந்த விடுதி காப்பாளர் என்று அவர் மீது கோவம் திரும்பி நேர கல்லூரிக்கு சென்றவன். உணவு நேரத்தில் அங்கே நின்று கொண்டிருந்த விடுதி வார்டன் வெங்கட்ராமனை இடுப்பு பகுதியில் கத்தியால் ஒரே குத்து குத்தியவன். அவர் அலறல் சத்தம் கேட்டவுடன் மீண்டும் மீண்டும் உடம்பு, முகம் என பல பகுதிகளில் சரமாரியாக குத்தி ஆத்திரத்தை தீர்த்து அங்கே நின்று அழுது கொண்டிருந்தான்.

அதன்பிறகு முசிறி டி.எஸ்.பி. நேரடி விசாரணைக்கு பிறகு வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டான் கல்லூரி மாணவன் ஹக்கீம். படித்து வேலைக்கு செல்ல வேண்டிய கல்லூரி மாணவன் தன் தவறின் விளைவால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து தற்போது சிறையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக