செவ்வாய், 12 நவம்பர், 2019

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டதுமாலைமலர் : மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் இருந்தன. ஆனால், முதலமைச்சர் பதவி பிரச்சினையால் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியால் ஆட்சியமைக்க முடியவில்லை.
இதனால் சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். அதன்பின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். சிவசேனா கட்சியால் ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கையை காட்ட முடியவில்லை. இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டது. ஆனால் கவர்னர் அதை நிராகரித்துவிட்டார்.
இதனால் மகாரடிஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை எந்த கட்சியாலும் காட்ட இயலவில்லை என கவர்னர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து மத்திய அமைச்சரவையில் விவாதம் செய்யப்பட்டது.
அப்போது ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜனாபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதால் மகாரஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக