செவ்வாய், 12 நவம்பர், 2019

அதிமுக கொடிகம்பம் விழுந்து ராஜேஸ்வரி படு காயம் ...

    தினமலர்: கோவை: சென்னையில் ஆளுங்கட்சியினர் வைத்த பேனர் தவறி விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் லாரி ஏறி இறந்தார். இதே போல், கோவையிலும் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததில், ஏற்பட்ட விபத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் வைக்கும் பேனர், கொடி கம்பங்கள் காரணமாக இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட போகின்றனரோ என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து காரில் சேலத்திற்கு சென்ற முதல்வரை வரவேற்க, சிட்ரா பகுதியில் சாலையில் இருபுறங்களிலும் அதிமுகவினர், இரும்பு கம்பியில் கட்சிக்கொடிகளை கட்டி நட்டு வைத்திருந்தனர். இந்நிலையில், அவிநாசிரோடு, கோல்டுவின்ஸ் அருகே மொபட்டில் வந்த இளம்பெண் ராஜேஸ்வரி, பைக்கில் வந்த நித்யானந்தம் ஆகியோர் மீது லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரியின் கால் எலும்பு முறிந்தது. நித்தியானந்தமும் காயமடைந்தார்.

சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சிகொடிகம்பம் சாய்ந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த கொடி கம்பங்களை மட்டும் அதிமுகவினர் அப்புறப்படுத்தினர்
சென்னையில் ரோட்டில் வைத்த பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதன்பின், பிளக்ஸ் பேனர்களுக்கு பதிலாக இரும்பு கம்பியால் கட்சி கொடிகளை கட்டி ரோட்டில் கம்பம் வைத்து வருகின்றனர். நேற்று (நவ.,11) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் கோவை வந்தார்.கோவையில் இருந்து கார் மூலம் சேலம் சென்றார். முதல்வரை வரவேற்க அ.தி.மு.க., கட்சியினர் சித்ரா பகுதியில் இருந்து இரு புறங்களிலும் ரோட்டின் ஓரத்தில் கட்சிக் கொடிகளை இரும்பு கம்பிகளில் கட்டி நட்டு வைத்திருந்தனர்.





இந்நிலையில் நேற்று காலை அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸ் அருகே மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி, 22 மற்றும் பைக்கில் சென்ற நித்யானந்தம் ஆகியோர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரியின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. நித்யானந்தமும் காயமடைந்தார். காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையிலும், ஆண் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.





இச்சூழலில் ரோட்டில் வைத்திருந்த கொடி கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. தகவலறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சென்று விசாரித்தனர். லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இத்தகவலால் குறிப்பிட்ட பகுதியில் வைத்திருந்த கொடி கம்பங்களை மட்டும் கட்சியினர் அப்புறப்படுத்தின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக