சனி, 12 அக்டோபர், 2019

தாமிரபரணிக் கரையில் பழைமையான கட்டுமானம்! - இன்னொரு கீழடியா?

ஆற்றங்கரையிலிருக்கும் பழைமையான கட்டடம்ஆற்றங்கரையிலிருக்கும் பழைமையான கட்டடம்vikatan.com - மு.செல்வம் : தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில், கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆற்றங்கரையிலிருக்கும் பழைமையான கட்டடம் . தாமிரபரணி ஆறுதான் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீராதாரம். ஆத்தூர் அருகே, தாமிரபரணி ஆற்றங்கரையில் பழங்கால கட்டட அமைப்பு ஒன்று சிதிலமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டட அமைப்பானது சதுர வடிவ சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதில் யாழி, அன்னப்பறவை, பெண் தெய்வங்கள் போன்ற சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளன. கல்லால் செய்யப்பட்ட நங்கூரம் ஒன்றும் அங்கு காணப்படுகிறது. இதை அறிந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் ஆற்றங்கரையில் கூடினர்.
>ஆற்றங்கரையிலிருக்கும் பழைமையான கட்டடம் . மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறைத் தலைவரும், ஆத்தூரைச் சேர்ந்தவருமான பாஸ்கர் தன்னுடைய மாணவர்களுடன் இந்தக் கட்டடத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் பேசியபோது ``கடந்த 200 ஆண்டுகளில் ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி ஆறு வற்றி யாரும் பார்த்ததில்லை. தற்போது ஆற்றுப் பகுதியில் கிடைத்திருக்கக்கூடிய கட்டடங்களின் அமைப்பு, கட்டப்பட்ட விதம், செங்கற்கள், சிற்பங்கள் இவற்றை வைத்துப் பார்க்கும்போது மன்னர்கள் காலத்தில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும், இது 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான நாகரிகத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

பாஸ்கர்

பாஸ்கர்பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கொற்கை துறைமுகமாக விளங்கியது. இந்த இடத்திலிருந்து கொற்கை 1 கி.மீ தொலைவில்தான் உள்ளது. எனவே, இது ஒரு கழிமுக பகுதியாக இருந்திருக்கலாம். இங்கு கிடைத்த நங்கூரம் இந்த இடத்தில் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெளிவாகிறது. அரசக் குடும்பத்தினர் தங்குவதற்காக இக்கட்டடம் கட்டப்பட்டிருக்கலாம்" என்றார். கீடியைப் போல இங்கும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக