சனி, 12 அக்டோபர், 2019

நாட்டை ஏமாற்ற.... பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜாஜா திட்டத்தின் பித்தலாட்டங்கள்


Muralidharan Pb : கீழ்க்கண்ட வகை மக்கள் இந்த காப்பீடு திட்டத்தை அனுபவிக்க இயலாது.
1. 2,3,4 சக்கர வாகனமோ, மீனவர்கள் மோட்டர் படகு வைத்திருப்போர்,
2. 3 அல்லது 4 சக்கர வேளாண் ஊர்தி வைத்திருப்போர்,
3. கிஸான் கடன் அட்டை 50000 ரூபாய்க்கு மேல் கடன் பெரும் தகுதி,
4.அரசு ஊழியர் எவரேனும் உள்ள வீடுகள்,
5. விவசாயம் சம்பந்தம் இல்லாத வருமானம் பெறும் வீடுகள்,
6. 10000 ரூபாய்க்கு மேல் வருமான ஈட்டும் குடும்பம்,
7.வருமான வரி செலுத்துபவர்கள்,
8. தொழில் வரி செலுத்துபவர்கள்,
9.3 அறைக்களுக்கு மேல் இருக்கும் நல்ல திடமான சுவர் உள்ள வீடுகள்,
10. ஃபிரிட்ஜ் வைத்திருப்பவர்கள்,
11. தொலைபேசி வைத்திருப்போர்,
12. 2.5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்,
13. 5 ஏக்கருக்கு மேல் பாசனத்தோடு, பருவ காலங்களில் 2 அல்லது 3 பயிர் வைத்து இருப்பவர்கள்,
14. 7.5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் அல்லது ஒன்றுக்கு மேல் பாசனத்திற்கான கருவி வைத்து இருப்பவர்கள்

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜாஜா திட்டத்தின் படி மேற் கூறப்பட்ட நபர்கள் இருந்தால் அவர்கள் காப்பீடு பெற முடியாது.



மேற்கூறிய மற்றவைகளை விட்டுத்தள்ளுவோம் சுற்றறிக்கை கூறும் 1 மற்றும் 6 இரண்டு வகை மக்களே இந்தியாவில் மிக மிக அதிகம். இவர்களுக்கு உதவாத எந்த திட்டமும் யாருக்கும் கிடைக்க போவதில்லை.

ஆக ஒன்றிய அரசு அறிவித்த இந்த திட்டத்தின் கீழ் பயனடைவோர் ராப்பிச்சைக்காரர் என்னும் இரவலர்கள் மட்டுமே.

ஆக நாட்டை ஏமாற்ற இந்த திட்டம். இதன் மூலம் நடக்கும் நிதி ஒதுக்கீடு ரிலையன்ஸ் அல்லது பிர்லா குழுமம் போன்றோர் நடத்தும் காப்பீட்டு நிறுவனத்துக்கு தான் இனாமாக ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கும்.

சில நிறுவனங்களில் தங்களுக்கு வேலை ஆக வேண்டி, தனது வாடிக்கையாளர்களுக்கு சரக்கு பார்ட்டி வைப்பது போல மக்களை மடை மாற்றம் செய்ய சின்மயி இப்படி பாதிக்கப்பட்டார் என்று ஒரு உதவாத செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

நாமும் தாம்பராஸ் நாராயணன் இப்படி கேட்டார் அங்கு அப்படி வரச்சொன்னார் என்று பேசிப் பேசி இவற்றை பற்றி எல்லாம் பேச மறுக்கிறோம். மறக்கடிக்கப்படுகிறோம்.

நமக்கு என்ன நஷ்டம் என்று கேட்பவர்களுக்கு, இவையெல்லாம் கலைஞர் தமிழ்நாட்டில் என்றோ அனைவருக்கும் செய்து விட்டார்.

அவர் இப்படி பாகுபாடு செய்து பிரிக்கவில்லை. அவர் எல்லோருக்கும் காப்பீடு வசதி செய்து கொடுத்தார்.

யாருக்குமே இல்லாத அக்கறை உனக்கு ஏன் ? என வினவுவோர்களுக்கு:

தேவைப்படுவோர் இலவசமாக அதன் பலன்கள் பெற்றனர். என்னைப் போல அரசின் காப்பீடு தேவையில்லை என்று கருதியவர்கள் சொந்த பணத்தை செலவு செய்து பெறுகிறோம்.

ஆனால் இப்படி யாருக்குமே உபயோகப்படாத ஒரு திட்டத்தை இன்று கொடுத்து, சில ஆண்டுகளுக்கு பின்னர், முன்பு கல்வியை மத்திய அரசு கட்டுப்பாட்டில் சேர்த்து, இன்று நீட் என்கிற வேண்டாத ஆணியை படிக்கும் மாணவ மாணவிகள் மண்டையில் அறைந்ததைப் போல் ஒரு நாள் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற தற்போது தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டமும் காற்றில் பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

#metoo மிதப்பில் இருக்கும் நண்பர்கள் விழித்தெழ விழைகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக