செவ்வாய், 29 அக்டோபர், 2019

சுஜித் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சுஜித் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புமாலைமலர் : ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மணப்பாறை அடுதத நடுக்காட்டுப்பள்ளியில் உள்ள சுஜித்தின் வீட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் இன்று நேரில் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து ஆறுதல் கூறினர்.

சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குழந்தை சுஜித்தை மீட்க அரசு சார்பில் எல்லா வகையிலும் விடாமுயற்சி செய்தோம். ஆனால் பலனளிக்கவில்லை. 

சுஜித் மீட்புப்பணி குறித்து அரசை ஸ்டாலின் குறை கூறுவது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு; இங்கு இருந்தவர்களுக்கு தெரியும் இரவு, பகல் பாராமல் அனைவரும் எப்படி மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள் என்பது.

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் மற்றும் அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக