சனி, 7 செப்டம்பர், 2019

மம்தா பானர்ஜி : ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம்

ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம் - மம்தா பானர்ஜி
 மாலைமலர் :  மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது மத்திய அரசு கொடுத்திருக்கலாம் என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார. இந்நிலையில், ப.சிதம்பரம் கைது தொடர்பாக மேற்கு வங்காளம் மாநில சட்டமன்றத்தில் இன்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ’எனக்கு இந்த வழக்கின் முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் சிதம்பரத்தை ஒரு சாதாரண கைதி போல திகார் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன? என்று புரியவில்லை.கு குறைந்தபட்ச மரியாதையையாவது மத்திய அரசு கொடுத்திருக்கலாம்’ என தெரிவித்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக