செவ்வாய், 17 செப்டம்பர், 2019

மயிலாடுதுறையில் வடமாநில இளைஞர்கள் இளம்பெண்ணை கடந்தினார்கள்

nakkheeran.in - selvakumar : மயிலாடுதுறை மாணவியை வெளி மாநில
இளைஞர்கள் காரில் கடத்தி சென்று கடுமையான போராட்டத்திற்குப்பிறகு நள்ளிரவில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் வேலூர் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகள் இடைநிலை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்திருக்கும் இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். வீட்டில் இருந்து தினமும் தனது ஸ்கூட்டியில் 6 கிலோ மீட்டர் தூரம் வேலைக்கு சென்று வருவது அவருடைய வழக்கம்.
இந்த நிலையில் ஞாயிறு இரவு வழக்கம்போல் தனது பணியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு ஒன்பது முப்பது மணி இருக்கும். வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது அதிவேகமாக வந்தகார் ஒன்று அவரது வாகனத்தை வழிமறித்தது. வாகனத்தில் இருந்த இறங்கிய மூன்று இளைஞர்கள் காயத்ரியின் ஸ்கூட்டியை தள்ளி விட்டு விட்டு அவரை குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி சீட்டிற்கு அடியில் போட்டு கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துள்ளனர். இந்த செய்தி அக்கம்பக்கத்தினர் மூலம் காயத்ரியின் பெற்றோருக்கு தெரிந்து பெரம்பூர் போலீசில் புகார் செய்தனர்.


காவல்துறையினரோ வழக்குப்பதிவு செய்து வழிநெடுகிலும் உள்ள கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வந்தனர். இரவு 12.30 மணி அளவில் காயத்ரியிடம் இருந்து சிற்றரசுவுக்கு போன்வந்தது." என்னை திருவாரூர் கங்களாஞ்சேரியில் மர்ம நபர்கள் இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டனர், தன்னை அழைத்து செல்ல வருமாறு அழைத்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிற்றரசன் காவல்துறையிடம் சொல்ல போலீசார் கங்களாஞ்சேரி சென்றனர். அங்கே ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த காயத்ரியை போலீஸ் ஜீப்பில் ஏற்றி வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காயத்ரி கூறுகையில்," வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு போய் கொண்டிருந்தேன் பின்னால் கார் ஒன்று வேகமாக வந்தது அந்த காரில் இருந்த 3 பேர் இறங்கி ஓடி வந்து என்னை குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றி சென்று விட்டனர். எனது ஸ்கூட்டியில் செல்போன், ஐடி கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை வைத்து அக்கம்பக்கத்தினர் எனது தந்தைக்கு கூறினார். கடத்தியவர்களில் டிரைவர் மட்டும் ஓரளவுக்கு தமிழ் பேசினான், மற்ற மூவரும் வடமாநில மொழியை பேசினர். அவர்களிடம் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தைக்கூறி அழுதேன், அந்த டிரைவர் அவர்களிடம் எடுத்துக்கூறி என்னை விட்டனர். என்னிடம் இருந்த நகைகளை பிடுங்கிக்கொண்டு, நிச்சயத்திற்கு போட்ட மோதிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு சென்றனர்." என்கிறார்.

காக்கிகளோ, "இதுல பெருசா சந்தேகம் இருக்கு, நகைக்காக கடத்தினா மோதிரத்தைக் கொடுத்திருக்கமாட்டானுங்க, சபலத்திற்காக கடத்தியிருந்தா சும்மாவிட்டிருக்கமாட்டானுங்க, நிறைய சந்தேகம் இருக்கு விரைவில் தெரியவரும்," என்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக