செவ்வாய், 17 செப்டம்பர், 2019

வளைகுடாவில் போர் மூளும் அபாயம் .. கச்சா எண்ணெய் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்!

தினத்தந்தி "சவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது, ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த பிராந்தியத்தில் பெரும் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் எண்ணெய் கிணறு மீது, ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த பிராந்தியத்தில் பெரும் பதட்டம் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த  செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம். கடந்த 14 ஆம் தேதி, சவுதி அரேபியாவில் உள்ள பிரபல அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறி வைத்து ஆளில்லா விமான தாக்குதல்  நடத்தப்பட்டன. இதனால் எண்ணெய் வயல்கள், தீப்பிடித்து எரிந்தன. > இந்த தாக்குதலில், சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா அறிவித்தது.
இந்த நிலையில்,  தற்போது, கச்சா எண்ணெய் விலை 20 சதவீதத்திற்கும் மேல்  அதிகரித்துள்ளது.  இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என, சவுதியும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளன.  ஆனால் ஈராக் தங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என, அறிவித்துள்ளது.


சவுதிக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதால், வளைகுடாவில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியா அரசு நிறுவனமான அரம்கோ உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. உலகின் பத்து சதவிகித எண்ணெய் உற்பத்தியை சவுதி செய்து வருகிறது. 

இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 20 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருக்கும் என, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் சுரானா தெரிவித்துள்ளார். இந்த சூழலால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை, அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக