வியாழன், 19 செப்டம்பர், 2019

ராஜஸ்தானி-பீகாரி - கெளரவி-பிரஜ்-கெளசாலி ஆகிய ஐந்து மொழிகளின் கலவைதான் இந்தி மொழி

Vijay Karthick : இந்தி மொழியின் லட்சணம் பாரீர்!
கெளரவி-பிரஜ்-கெளசாலி-ராஜஸ்தானி-பீகாரி ஆகிய ஐந்து குழுக்களை கொண்டது இந்தி மொழி.
ஒவ்வோர் குழுவிலும் இரண்டு முதல் ஐந்து வரையிலான மொழிப்பிரிவுகள் இருக்கின்றன.
1] "கடீப்போலி",பங்காரு என்ற இரண்டும் கௌரவி மொழிக்குழுவை சேர்ந்தவை.
2] கண்ணோவ்ஜி,பண்டேலி,பிரஜ்பாஷா ஆகியன பிரஜ் குழுவை சேர்ந்தவை.
3] அவதி,பஹேலி,சட்டிஸ்காதி ஆகியன கௌசாலி குழுவை சேர்ந்தவை.
4]மார்வாடி,மால்வி,ஜெய்புரி,மேவதி,மாலினி,ஆகியன ராஜஸ்தானி குழுவை சேர்ந்தவை.
5]மைதிலி,போஜ்பூரி,மகாஹி,கார்வாலி,காமாயுளி,நேபாலி ஆகியன பீகாரி குழுவையும் சார்ந்தவையாக இருக்கின்றன.
ஆக இந்தியாவில் 19 வகையான இந்திகள் பேசப்படுகின்றன.இவற்றில் இந்திய அரசு ஆட்சி மொழியாக முன்வைக்கும் இந்தி வெறும் இரண்டரை கோடிப் பேர் மட்டுமே பேசக்கூடிய கடீபோலி இந்தியாகும். [1950களின் கணக்குப்படி]
டெல்லி சுற்றுப்புறத்தில் இருப்பவர்களால் மட்டுமே பேசக்கூடிய கடீபோலியை பேசுபவர்கள் இன்று பத்து கோடி பேர் இருக்ககூடுமா? பிறகு எப்படி 125 கோடிப் பேருக்கான மொழியாக இருக்கமுடியும்.
மொழியில் வல்லுநரான சுனிதா குமார் சாட்டர்ஜி கூறும் கூற்றில் 1850 க்கு முன் கடீபோலி வகை இந்தி காணப்பட்டதாக எந்த குறிப்புகளும் இல்லை என்கிறார்.

இந்தியாவின் மிக இளமையான மொழிகளில் ஒன்றுதான் இந்தி எனவும்,அதில் இலக்கியங்களோ-அறிவுசார் அறிவியல் நூல்களோ இல்லை என்கிறார் மற்றோர் மொழியியல் ஆய்வாளர் பஷீர் அகமது சயீத்.
மும்மொழி கொள்கை மூலம் " என் மொழியை நீ படி! உன் மொழியை நான் படிக்கிறேன் என்பது ஆகப் பெரிய அரசியல் மோசடித்தனம்"
இந்திக்காரர்களுக்கு படிக்கவே தெரியாது. இதில் எப்படி மற்ற மொழிகளை படிப்பார்கள்.அதுவுமில்லாமல் மதவாதிகளின் விருப்பமான இந்தியின் நோக்கம் ஆதிக்கம் செலுத்தவே!
உலகில் மதம் நீக்கப்பட்ட ஒரு மொழி என்றால் அது ஆங்கிலம்தான் என்றார் பெரியார்.எனவே எங்கள் choice ஆங்கிலம்தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக