வியாழன், 19 செப்டம்பர், 2019

இலங்கை குடியரசு தலைவர் ஆட்சி முறையை நீக்க ரணில் மகிந்தா மைத்திரி பெச்சுவார்த்தை?

Jeevan Prasad : தலைவர்களது தலைகளை தப்ப வைத்துக் கொள்ள சர்வ ஜன வாக்கெடுப்பு ! ஜனாதிபதி தேர்தல் இல்லை?
அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக சர்வ ஜன வாக்கெடுப்பு (A referendum) ஒன்றுக்கு செல்வதற்காக ரணில் மற்றும் மைத்ரி இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகிறது.
ஜேவீபீ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது திருத்தச் சட்டத்துக்காக பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையை பெற்று உச்ச நீதிமன்ற முடிவின் பிரகாரம் சர்வ ஜன வாக்கெடுப்புக்கு சென்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்க பேச்சுகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து ஆரம்பத்தில் மகிந்த சாதகமான பதிலை கொடுக்காதிருந்தார். இப்போதுள்ள நிலையில் கோட்டாபய ஜனாதிபதி தேர்தலில் வெல்லக் கூடிய சாத்தியம் இல்லாத சூழ்நிலை மற்றும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் எனும் நிலையை உணர்ந்த மகிந்தவும் இதை ஆதரிப்பார் என தெரிய வருகிறது.

இப்போது கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள உட் பூசல்களால் எல்லோருடைய தலைகளையும் தப்ப வைத்துக் கொள்ள அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்தினூடாக தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதை ரணில் - மைத்ரி - மகிந்த ஆகிய மூவரும் கரிசனை கொண்டுள்ளதாகவும் , அதன்படி அந்த ஜனாதிபதியாக மைத்ரியையே தேர்வு செய்வதென்றும் ஒரு இணக்கப்பாட்டுக்கு ஓரளவு வந்துள்ளதாக அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக