வியாழன், 19 செப்டம்பர், 2019

இந்தியை திணிக்க மாட்டோம் .. மத்திய அரசு திமுகவுக்கு வாக்குறுதி.. ஸ்டாலின் .. ஆளுனர் சந்திப்பின் விபரம்


Prakash JP : "ஆளுநர் அழைப்பு - சந்திப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்"
நேற்று காலையில் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் கால் ் ஷா என்னிடம் கூறினார். அதற்காக தான் அழைத்தேன். உங்கள் போராட்டத்தை வாப‌ஸ் வாங்க வேண்டும்" என்றார். நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்டேன். "கவர்னர் என்ற முறையில் நான் மத்திய அரசின் பிரதிநிதியாக சொல்கிறேன். நீங்கள் என்னை நம்பலாம்" என்று தெரிவித்தார். 
வந்தது. ஆளுநர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று தெரிவித்தார் ஒரு அதிகாரி. எனக்கு பல பணிகள் உள்ளன என்றேன். நீங்கள் வரும் நேரத்தில் உங்களை சந்திக்க ஆளுநர் காத்திருக்கிறார் என்றார். சரி. மாலையில் வருகிறேன் என்றேன். நானும், அண்ணன் டி.ஆர் பாலுவும் சென்றோம். ஆளுநர் என்னிடம் "இந்தி திணிப்பு செய்ய மாட்டோம் என்று உங்களிடம் தெரிவிக்கும்படி உள்துறை அமைச்சர்  அமித் ஷா என்னிடம் கூறினார்!


அதன் பின்னரே திமுக அறிவித்திருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தேன். அமித் ஷாவும் தனது கருத்தை வாபஸ் பெற்று அறிக்கை வெளியிட்டார். திமுக போராட்டத்தை வாப‌ஸ் பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் போராட்டம் நடக்கும்.
இன்று நடைபெற்ற முன்னாள் திமுக எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் நினைவேந்தல் நிகழ்வில் ஸ்டாலின் அறிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக