ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சிறையில் நடந்த ராம்குமார் கொலை ..உடலில் 12 இடங்களில் மின்சார ஷாக் ..போஸ்ட் மார்டம்

வெப்துனியா:

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலையை மையமாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே புதிய படம் தயாரானது. இந்த படத்தை ரமேஷ் செல்வன் இயக்கினார். ;ரவிதேவன் தயாரித்தார். சுவாதியாக ஐராவும் ராம்குமாராக மனோவும் நடித்தனர். கதாபாத்திரங்கள் சுவாதி, ராம்குமார் என்ற பெயரிலேயே இருந்தன.

ஒரு வருடத்துக்கு முன்பே படப் பிடிப்பை முடித்து திரைக்கு கொண்டு வர தயாரானபோது எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். படக்குழுவினர் போலீசாரிடம் நேரில் ஆஜராகி சர்ச்சை காட்சிகளை நீக்கினர். கதாபாத்திரங்கள் பெயரையும் சுமதி, ராஜ்குமார் என்று மாற்றினர். படத்தின் தலைப்பும் ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றப்பட்டது. தணிக்கை குழுவும் சில காட்சிகளை நீக்கிவிட்டு ‘யூஏ’ சான்றிதழ் அளித்தது. படத்தை நாளை மறுநாள் 26-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்ட நிலையில் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் படத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு படத்தை திரையிட்டு காட்டினர படத்தை பார்த்த திருமாவளவன், “சுவாதி கொலையின் பின்னணியில் சில மர்ம முடிச்சுகள் உள்ளன. ராம்குமார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. அந்த வழக்கு அடிப்படையில் தயாராகி உள்ள இந்த படம் நெடிய விவாதத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த படத்தை வெளியிடுவதற்கு எந்த சிக்கலும் இருக்காது” என்றார். இதைத் தொடர்ந்து படம் திரைக்கு வருகிறது.<




நக்கீரன் -ப.ராம்குமார் : சென்னை சாப்வேர் இன்ஜினியர் சுவாதி கொலையில் தொடர்பு என்று கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் மாண்டு போன மீனாட்சிபுரத்தின் ராம்குமாரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

18.09.2016ல் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது ஆனால் ராம்குமார் சாவில் மர்மம் இருக்கிறது அது தற்கொலையல்ல. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது தந்தையான நெல்லை மாவட்டத்தின் மீனாட்சிபுரம் கிராமத்திலிருக்கும் பரமசிவன் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்திருந்தார்.

swathi murder

புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதற்கான முகாந்திரமும் இல்லை. மீறல்கள் உள்ளன, என்று கடந்த சில மாதங்களுக்கு முன் சிறைவார்டன்கள், ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டதில் அவருடனிருந்த சக கைதிகள் ஆகியோரின் பேட்டி மற்றும் ஆதாரத்துடன் நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரை வெளியாகி அதிர்வலைகளைக் கிளப்பியது. 

swathi murder

அதே சமயம் அது தற்கொலையல்ல.கொலை வழக்காக மாற்றி அதற்கான விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று அவர் தந்தை கொடுத்த புகார் நிலுவையிலிருந்தது. இந்த நிலையில், மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு, தாமாக முன் வந்து ராம்குமார் இறப்பு தொடர்பான வழக்கை மீண்டும் விசாணையைத் துவக்கியது. அதற்காக பிப் 15 அன்று ராம்குமாரின் தந்தை பரமசிவன் ஆஐராக வேண்டும் என்று புலனாய்வுப் பிரிவு அவருக்குச் சம்மன் அனுப்பியது.

அதன்படி பரமசிவம், நெல்லை வந்த மனித உரிமை ஆணைய புலானாய்வுப் பிரிவின் எஸ்.பி. சத்தியபிரியா, டி.எஸ்.பி. பிரபு, இன்ஸ்பெக்டர் அகிலா ஆகியோர் முன்னிலையில் ஆஐரானார்.

அவரிடம் ராம்குமார் மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் உள்ளன என்று எஸ்.பி. சத்ய பிரியா விசாரித்தார். அது சமயம், அவர், சில ஆவணங்களைக் கொடுத்து விட்டு தனது தரப்பு வாக்கு மூலங்களை எஸ்.பி. சத்யா பிரியா குழுவிடம் பதிவு செய்திருக்கிறார்.

swathi murder

விசாரணை முடிந்து வந்தவரிடம் நாம் பேசியதில், எஸ்.பி.யம்மா என்கிட்ட  விபரமெல்லாம் கேட்டாங்க. நான் பழைய மாதிரியே சில ஆவணங்களைக் குடுத்துட்டு முன்னால சொன்ன எங்க சந்தேகங்களச் சொன்னோம். சுவாதியக் கொன்னது யாரு. உண்மையான குற்றவாளி யாரு, அது தெரியணும். அரசு பொறுப்புல இருந்தவர் , சிறை பாதுகாப்பல இருந்தவர்  எப்படிச் இறந்தார். ஜெயில்ல ஒயரைக் கடிச்சார்னு சொன்னாங்க. ஒருத்தரால அப்படி மின்சார வயரைக் கடிக்க முடியுமா. நடக்குற காரியமா. முதல்ல அவனுக்கு மோஷன் போவுது ஆஸ்பத்திரிக்கி கொண்டு போறோம். வாங்கன்னு தான் சொன்னாங்க. அடுத்த பத்து நிமிஷத்தில் அவம் இறந்திட்டாம்னு சொல்லிட்டாங்க. தற்கொலை இல்ல. கொலை தான். அதன் விசாரிக்கணும்னு இந்த ஆதாரத்த எல்லாம் குடுத்தோம். எஸ்.பியும், நாங்களும் ஜெயில்ல வார்டன், அவனோட இருந்த கைதிகள்னு எல்லார்ட்டயும் விசாரிச்சோம்னு சொன்னவுககிட்ட, நக்கீரன்ல அட்டைல போட்டு ராம்குமார் சாவு. தற்கொலையில்லன்னு, ஜெயில்ல உள்ளவுக கிட்டல்லாம் விசாரிச்சு வந்த நக்கீரன் செய்தி புக் ஜெராக்ஸ் காப்பிய அந்தம்மாட்டக் குடுத்து, இதப் பாருங்க, அதுல கூட தற்கொலையில்லன்னு போட்ருக்கின்னு, நான் ஆவணமா, நக்கீரன், ரெக்கார்டா பதிவு பண்ணிக் குடுத்தத வாங்கிப் பாத்த எஸ்.பி அதப் பதிவு பண்ணிக்கிட்டு, நானும் பாத்தேன்னு சொல்லி ரெக்கார்டா வைச்சுக் கிட்டாக. நாங்க முடிஞ்ச வரைக்கும் நல்லது செய்றோம். நல்ல நடவடிக்கை எடுக்குறோம்னு சொன்னவுக, வெளியில போயி இதப் பெரிசு படுத்தாதீகன்னு சொன்னாக. என்னால முடிஞ்ச வரைக்கும் ஆதாரம், சந்தேகத்தக் குடுத்திருக்கேம். என்ன நடக்கும்னு பாப்போம்யா என்றார் தளர்வான குரலில்.

மனித உரிமை ஆணைய புலன் விசாரணைக் குழு, நக்கீரன் கட்டுரையை ராம்குமாரின் மர்ம சாவு விஷயத்தில் முக்கிய ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக