ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

நல்ல மனிதர்களும் RSS பாசிசத்தால் உள்வாங்கப்பட்டு பாசிஸ்டுகளாகிறார்கள்?

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களின் விபர பட்டியலை எனக்கு ஒருவர்
அனுப்பி இருந்தார் . அவர் எனக்கு நீண்ட நாளைய நண்பர்.
ஏனோ கடந்த பத்து வருடங்களாக சுவாமிஜி பாபாஜி அனந்த பத்மநாபசுவாமி  திருப்பதி பாலாஜி,  டபுள் ஸ்ரீஜி  , ஜகஜித்ஜி என்று அதிகம் நேரத்தையும் பணத்தையும் களவு கொடுத்துகொண்டிருந்தார் .
நான் அவரின் இந்த ஆத்மீக பேர்வழிகளின் சுயரூபம் பற்றி என்ன சொன்னாலும் கேட்கமாட்டார் .
தவறான நபர்களின் சகவாசம் மெல்ல மெல்ல அவரை ஒரு முட்டாளாக மாற்றி கொண்டிருக்கிறது என்று பல தடவை அவரிடம் கூறியிருக்கிறேன் . அவர் அவற்றை செவி மடுப்பதில்லை.. சிரித்து சமாளிப்பார் . சரி ஏதோ அவரின் பொழுது போக்கு என்று கருதினேன்.
தற்போது ஆர் எஸ் எஸ் இன் அங்கத்தவராகவே மாறிvவிட்டிருக்கிறார்.

அவர் முன்பு 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் போது ஆ. ராசாவின் கடல் போன்ற சொத்து விபரங்களின் பட்டியலையும் அனுபியிருக்கிறார்.
அதற்கு நான்  கூறிய எந்த விளக்கத்தையும்  அவர் கேட்க தயாராக இல்லை.
இப்போதாவது ஆ.ராசாவின் சொத்து பற்றி நீங்கள் கூறியது  எல்லாம் தவறுதானே அதற்கு என்ன கூறுகிறீர்கள் என்ற எனது கேள்வியை அவர் மிகவும் வேடிக்கையாக்கி கடந்து போனார்.

சாதாரண அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் பெரிய பொருட்டே அல்ல. ஆனால் எனது நண்பர் அப்படி பட்டவரே அல்ல.
மிகவும் பரோபகார சிந்தையும் நேர்மையும் உள்ளவர் .
அவரிடம் இருந்த நல்ல குணங்கள் எல்லாம் விடைபெற்று இருந்தது .
எனக்கு இது மிகவும் அதிர்ச்சி அளித்தது.
தற்போது அவரின் அடிப்படை குணமே மாறிவிட்டிருக்கிறது.
முன்பெல்லாம் மோடி என்று குறிப்பிடுவார் இப்போதெல்லாம்  மோடிஜி , நிர்மலாஜி  என்று ஒரே ஜி ஜி தான் ...
மனசாட்சிக்கு மிகவும் மரியாதையை கொடுக்கும் அவரது மென்மையான குணம் இப்போது அவரிடம் இல்லை. மிகவும் தெளிவாக பேசுவதாக எண்ணிக்கொண்டு அசல் நிர்மலா சீதா , .வானதி சீனி , தமிழி சவுண்டு , சிமிரிதி பாணியில் பேசுகிறார்.
ஒரு நல்ல மனுஷியின் வீழ்ச்சி!.
கடந்த தேர்தலில் பாஜக தனது மாநிலத்தில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பெரிதும் விரும்பினார் ..  கோயில் கோயிலாக சுற்றினார் ..ஆனால் அங்கு பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அந்த கோபத்தில் இப்போது முழு நேர  மாதாஜி ஆகிவிட்டார்.
இப்படித்தான்  ஹிட்லரின் எழுச்சியின் போது பெரும்பான்மை ஜெர்மானியர்கள் இருந்தார்கள்!
நல்ல மனிதர்களும் பாசிச குணங்களால் உள்வாங்கப்பட்டு பாசிஸ்டுகளானார்கள்!
இவர்கள் கொடுக்கப்போகும் விலை மிகவும் பெரிதாக இருக்கப்போகிறது.
வரலாறு அந்த பாடத்தைத்தான் கூறுகிறது....சமுகவலையில் அனோனிமஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக