ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

காஷ்மீரில் மருத்துவ வசதிகள் கேள்விக்குறி ? ... பெல்லட் குண்டுகள் ... இந்திய அரசு மறைக்கிறது ..


"Vivek Gananathan : " மருந்து பஞ்சத்தால் அழியும் காஷ்மீர் ! காஷ்மீரில்
மருந்துப்பொருட்கள் அதிவேகமாக தீர்ந்துவருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான மருந்து பஞ்சம் உருவாகியுள்ளது. காஷ்மீரில் அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட பிறகு வேறு எந்தக்கடைகளுக்கும் அனுமதி இல்லை. .மருந்துக்கடைகளுக்கு மட்டுமே பெயரளவிலான அனுமதி இருந்தது. ஆனால், மறைமுக நெருக்கடிகளால் இப்போது
மருத்துவ அவசரத்திற்கு (Medical Emergency) எதிரான முடக்கு நடவடிக்கைகளை பாஜக நடத்துவது மெல்ல மெல்ல தெரியவருகிறது.
முறையான மருந்துகள், 'Lifesaving Tablets' இல்லாமல் நோயாளிகள் இறக்கும் அவலச்சூழலுக்கு காஷ்மீர் தள்ளப்பட்டுள்ளது. SMHS போன்ற ஸ்ரீநகரின் பிரதான மருத்துமனைகளிலேயே இச்சூழல் உருவாகியுள்ளது எனில் புறநகர் தொடங்கி குக்கிராமம் வரையிலான நிலைமைகள் யோசிக்கவே அதிர்ச்சி அளிக்கின்றன.
அடிப்படையான தகவல் தொடர்பு துண்டிப்பே இந்த அவலத்துக்கு காரணம் என செய்தி வெளியிட்டுள்ளது நியூஸ் 18.
ஏற்கனவே, தி வயர் வெளியிட்ட ஆவணப்படத்தில், இசுலாமியரைக் குறிவைத்து, மக்களை குருடர்கள் ஆக்கும் நோக்கத்தோடு பெல்லட் குண்டுகளால் நடத்தப்படும் தாக்குதல்களின் போக்கு எப்படி 'நடைமுறை வாழ்க்கைக்கு பயனற்ற ஊனங்களாக' மக்களை மாற்றுகிறது என விளக்கப்பட்டிருந்தது.
பெல்லட் குண்டுகளா தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையிலிருந்த நபர்களே காஷ்மீரின் அவலத்தை அந்த ஆவணப்படத்தில் பேசியிருந்தனர். இப்போது,தாக்குதலுக்கு உள்ளானவனுக்கு மருத்துவ வசதியும் கிடைக்காது என்பதை யோசிக்கவே நடுக்கமாக உள்ளது.
மக்களின் தேவை பொருட்டு திறக்கப்பட்ட சில உணவுக்கடைகளை 'தீவிரவாதிக்கு சோறுபோடுறியா... ராணுவத்துக்கு எதிராக போராடுபவனுக்கு சோறு போட கடை நடத்துறியா' எனக்கேட்டு இந்திய ஆயுதப்படை மூடியதாக தி வயர் ஆவணப்படத்தில் மக்கள் பதிவு செய்திருக்கிறார்கள். உணவுக்கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இப்போது மருந்தில் விஷம் கொட்டப்படுகிறது.
நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டிருக்கும் புதிய ஆவணத்திலும், மருத்துவமனைகளில் மக்கள் விரட்டப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, அரசு ஆயுதபாரிகளால் மிரட்டப்படுவது மீண்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
மக்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ வசதியை கெடுப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறல்.
உடனடியாக காஷ்மீருக்குத் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டு, மருத்துவ அவசரச்சூழல் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக