ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

அருண் ஜெட்லி ... பணமதிப்பிழப்பின் சூத்திரதாரி ... 3 கண்டெய்னர்களில் சிக்கியது 570 கோடிகள் மட்டும்தானா... Flashbacks

Raja Rajendran : 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த சமயம்,
மூன்று கண்டெய்னர்கள் முழுக்க பணம் சிக்குகிறது. 500 கோடிகள் என்றார்கள். 5000 கோடிகளாகவும் இருக்கக் கூடுமென்றார்கள். இரண்டு நாட்கள் கேட்பாரின்றி அந்தப் பணக்கார லாரிகள் அனாதையாக நடுத்தெருவில் நின்றன !
மன்னார்குடி மாஃபியாக்களின் பணம், ஸ்டீல் மங்கையின் பணம்
என்றெல்லாம் புரளி பரவியது. ஜேட்லியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். கூலாக மூன்றாம் நாள் அது ஸ்டேட் வங்கியின் பணம் என்று எடுத்துக் கொண்டுப் போனார்கள்
ஓர் அரசு வங்கிப் பணத்தை எடுத்துப் போக எதற்கு அத்தனை ரகசியம் என்று தெரியவில்லை. ஏன் போலிப் பதிவெண் கொண்ட லாரிகளில் கொண்டு சென்றார்களென்று ஒரே ஒரு வங்கி அதிகாரி கூட நமக்கு விளக்கவில்லை. ஏன் பறக்கும் படையினர் சோதனைக்காக லாரியை நிற்கச் சொல்லும் போது, தடைகளை உடைத்து வேகமாக அந்த லாரிகள் தப்பி ஓட முயன்றன என்பதைப் பற்றி இன்று அறம் பேசும் எந்த வாயும் கேட்கவில்லை. லுங்கி அணிந்த செக்யூரிட்டிகள் அந்தப் பணத்தை எப்படி காக்க முடியுமென்று காவல்துறை விளக்கம் ஏதுமில்லை, மூச்.

இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளதென்கிறார்கள். மூன்று வருடங்கள் முழுதாகக் கடந்து விட்டது. ஜெயாவும் இறந்துவிட்டார், நடராஜனும் இறந்துவிட்டார், இதோ இன்று அருண் ஜேட்லியும் இறந்துவிட்டார். ஆனால் வழக்கு மட்டும் பிறந்தும் இன்னும் பெயர் கூட வைக்காமல் அப்படியே வளராமல் உள்ளது.
செத்துப் போன மூவரும் அத்தனை சாணக்கியத்தனம் செய்து சம்பாதித்தென்ன பயன் ? ஒரு ரூபாயைக் கூட எடுத்துப் போக முடியாது. எவனெவனோ நோகாமல் அனுபவிக்கப் போகிறார்கள்.
மக்கள், ஊடககங்கள், அறிவார்ந்த படைப்பாளிகள் அனைவருக்கும் ஒருசேர பெப்பே காட்டிய கொடூரச் சம்பவம் இது.
இரண்டாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை. இது இவருக்கே கூடத் தெரியாமல் மோதியே நேரடியாக ரகசியமாக எடுத்த முடிவென்பார்கள். அவர்கள் ஆயிரம் கதை விடுவார்கள். அதை அப்படியே நம்ப நாமென்ன பக்தாளா ?
ஒரு புகழ்பெற்ற பிரபல வக்கீல், நிர்வாக அனுபவமுடைய நிதி அமைச்சருக்கு ( மக்களால் தோற்கடிக்கப்பட்டும் எம் பி ஆனவர், நம்ம சின்ன மாங்கா போல ) இத்தகைய மாபெரும் அதிரடி நடவடிக்கை, எளிய மக்களை எப்படி குலைக்குமென கணித்திருக்க மாட்டாரா ?
மயிரே போச்சு என்று வங்கி தலைமை அதிகாரிகளுடன் சேர்ந்து இவரும், இவருடைய அல்லக்கைகளும் பழைய நோட்டுக்களை முறைகேடாக மாற்றி, அதற்குதவி அடித்த பல்லாயிரம் கோடி ரூபாய் நோட்டுகளில், வரிசையில் நிற்க மாட்டாமல் மயங்கி சரிந்து இறந்தோரின் குருதிகள் படிந்துள்ளன என்றால் அதில் எப்படி பொய்யிருக்கும் ?
இறுதியாக ஜி எஸ் டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி. நன்கு நினைவில் வையுங்கள். இந்த வரியை இவர்கள் இன்னமும் கடுமையான நெறிமுறைகளான கம்பல்சரி கம்யூட்டர் பில், E way Bill, கம்பல்சரி monthly return என்று இந்தியா முழுக்க அமல்படுத்தவே இல்லை.
அதாவது பெரிய பெரிய கம்பெனிகளைத் தவிர, ஏனையோர் இங்கு தெற்கில் முறையாக G S T யில் நுழைந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்க, இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கில் பெரும்பாலோர் GST இருந்தும் பில் நம்பர் உட்பட கைகளில் எழுதி, கைகளில் பில் போட்டு, ரிடர்ன் தாக்கல் செய்யாமல், ஈ வே சலான் எடுக்காமல், வரி ஏய்ப்பு செய்துதான், வணிகம் புரிந்து வருகிறார்கள்.
ஆனால் அதற்கே நாடு திவால் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மாதா மாதம் இத்தனை கோடி ரூபாய் GST வருவாய் என பீற்றிக் கொண்டவர்கள், பல மாதங்களாக அது எவ்வளவு வருகிறது என்று சொல்வதே இல்லை.
GST க்கு முந்தைய மாநில &; மத்திய அரசின் வரிவருவாய் எவ்வளவு, GST அடையப் போகும் இலக்கு எவ்வளவு, அடைந்த இலக்கு எவ்வளவு என்று சொல்ல வேண்டிய அரசோ, கேள்விகள் கேட்க வேண்டிய பக்தாள் எக்கனாமிஸ்ட்களோ, வாயையும், புட்டத்தையும் மூடிக்கொண்டு பேந்த பேந்த முழிக்கிறான்கள்.
உச்சகொடுமை இவன்கள் போட்ட 18% 28% வரிகள். முதலில் கெஞ்சியபோது நாட்டுக்காகக் கட்டித்தான் ஆக வேண்டும், மயிரளவு கூட குறைக்க மாட்டேன் என இறுமாப்பு காட்டியவர்தான் இன்று செத்துப் போய் கிடக்கிறார் !
கடலைமிட்டாய், நாப்கின் தொடங்கி சினிமா, மக்கள் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் வரை இவர்கள் நிர்ணயித்த அதீத வரிகளால், பல லட்ச பேருடைய வாழ்க்கை முற்றிலும் குலைந்துப் போனது😰
" ஏன் ஹோட்டல்ல போய்ச் சாப்பிடுற ? வீட்ல சமைச்சு சாப்பிடு, அதுக்கெல்லாம் நாங்க ஜி எஸ் டி போடலையே " என்று உளறிய அதே வாய், நேற்று பழைய வண்டியயெல்லாம் எக்சேஞ்ச் பண்ண ஷோரூம் வாங்கப்பா, அப்பதான் நாட்ட நிமித்த முடியுமென்று மீண்டும் உளறியது, இன்று அதுதான் இன்றைய பிணமமர்ந்த நாற்காலியில் வீற்றிருக்கிறது !
ஜெயாவுக்குச் சொன்னதுதான், சாவு துக்கத்தைத் தரவேண்டும், பெருமூச்சுடனான மகிழ்வைத் தரக்கூடாது, ஆனால் ஜெவுக்கும், ஜேட்லிக்கும் பின்னதே எனக்கு வந்து தொலைக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக