ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

ஒடிசாவில் தமிழக பேராசிரியரும் மனைவியும் மர்ம மரணம் .. Mystery! NIT Rourkela Professor, wife found dead inside house

the exact reason behind the deaths is still unclear, a four-page suicide note has been recovered from the room. Rourkela SP Sarthak Sarangi and a forensic team later reached the spot and began an inquiry into the incident
   மாலைமலர் :ஒடிசாவில்   தமிழக பேராசிரியர் மனைவியுடன் மர்ம மரணம் . தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர்கள் எழுதியதாக கூறப்படும்  கடிதம் சிக்கியது.
தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர்கள் எழுதிய கடிதம் சிக்கியது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 38). ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி மால்வி கேசவன் (35). திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி. கல்லூரி ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபாலனின் வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நேற்று காலை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.


அங்குள்ள குளியல் அறையில் ஜெயபாலன் பிணமாக கிடந்தார். படுக்கை அறையில் அவரது மனைவி மால்வி கேசவன் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பு இருவரும் வாந்தி எடுத்துள்ளதாகவும், இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேராசிரியர் ஜெயபாலன் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று அவரது வீட்டில் இருந்து கிடைத்தது. அதில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி உள்ளார். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேராசிரியர் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள், தமிழகத்தில் இருந்து ரூர்கேலா விரைந்துள்ளனர்
odishasuntimes.com/ Rourkela.. Mystery shrouded the death of an Assistant Professor of National Institute of Technology (NIT) Rourkela and his wife, whose bodies were recovered from their residential quarters this morning.
The deceased have been identified as R Jayabalan (38), an Assistant Professor of Life Science Department and his 35-year-old wife Malavi Kesavan of Erode district of Tamil Nadu. The couple had married nine years ago.



Sources said the door of the house on the NITR campus was shut for the last two days. On receiving information, police rushed to the spot, broke open the door and recovered the bodies.

Though the exact reason behind the deaths is still unclear, a four-page suicide note has been recovered from the room. Rourkela SP Sarthak Sarangi and a forensic team later reached the spot and began an inquiry into the incident.

“Security In-charge Suman Dutta and Registrar Pradip Das informed us about the incident this morning. It is premature to comment on the matter. We will investigate minutely and then can tell anything,” said a police officer.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக