திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சிபிஐ விசாரணை; ப.சிதம்பரத்தை விசாரிக்க காவலை மேலும் நீட்டித்த நீதிமன்றம்!

  tamil.samayam.com :   ப.சிதம்பரத்திற்கு வழங்கிய சிபிஐ காவலை மேலும் சில நாட்கள் நீட்டித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை அணுகினார். சிபிஐ பதிவு செய்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் கீழ், சிதம்பரத்தை ஏற்கனவே சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த, அதே வழக்கை எதிர்த்து சிதம்பரம் மனு தாக்கல் செய்திருப்பது அர்த்தமற்றது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, 5 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐக்கு கடந்த 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இன்று(26ஆம் தேதி) சிபிஐ காவல் முடிகிறது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேசமயம் ப.சிதம்பரம் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு 5 நாட்கள் காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை வைத்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு மேலும் 5 நாட்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். இதனால் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக