ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

ஸ்டாலின் இலங்கை செல்வாரா? இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கீம் மகளின் திருமனத்துக்கு நேரில் அழைப்பு!


  தினக்குரல் :  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். திரு ஹக்கீமின் மகளின் திருமணத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலினுக்கு  நேரில் அழைப்பு விடுத்தார்

தி மு க தலைவராக ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்தினை தெரிவித்த ஹக்கீம் , செப்ரெம்பரில் நடைபெறவுள்ள தனது புதல்வியின் திருமண நிகழ்வுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்.
இவரின் அழைப்பை ஏற்று ஸ்டாலின் இலங்கை செல்வாரா என்பது பலரின் மனதில் ஓடும் கேள்வியாகும். 
திரு ரவுப் ஹக்கீம் இலங்கையில் மிகவும் செல்வாக்கு உள்ள தலைவராகும். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் மகிந்தா ராஜபக்சவுடனும் மாத்திரம் அல்லாமல் TNA  தலைவர் திரு சம்பந்தனோடும் மிகவும் நல்ல புரிந்துணர்வு கொண்டவராகும.
இந்நிலையில் இவர் நேரில் வந்து அழைப்பு கொடுத்தமை ஒரு சாதாரண விடயம் அல்ல என்றும் கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக