சனி, 17 ஆகஸ்ட், 2019

ஈரான்.. தமிழ் பாட்டுக்கு நடனம் ஆடும் ஈரானிய ஜிம் பயிற்சியாளர்கள் மாம்பழமாம் மாம்பழமாம் .. வீடியோ

  மாலைமலர் : ஈரானில் ஜிம் ஒன்றில் காலை நேர உடற்பயிற்சியில் பிரபல தமிழ் பாடல் ஒன்றுக்கு சிலர் நடனம் ஆடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இன்று காலை, ஈரான் நாட்டில் உள்ள ஜிம் ஒன்றில் பிரபல தமிழ் பாட்டிற்கு ஆடியபடி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். ஈரானில் உள்ள, ஜிம் ஒன்றில் விஜய் நடிப்பில் வெளியாகி சக்கப்போடு போட்ட போக்கிரி படத்தின் ‘மாம்பழமாம் மாம்பழம்’ பாடலை காலை உடற்பயிற்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் பாடலை ஓடவிட்டு இதற்கு ஏற்றபடி நடன அசைவுகளை ஜிம்மின் பயிற்சியாளர் வாடிக்கையாளர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
இந்த வீடியோவை அனு சேகல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடவே, அதனை ஆனந்த் மகேந்திரா பார்த்து விருப்பப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி் வருகிறது. இது குறித்து ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது நிஜம்தானா? எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனி நானும் படுக்கையில் இருந்து எழுந்து, தமிழ் பாடல்களை ஒலிக்கச் செய்து புதிய நாளை சந்திக்கப் போகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக