சனி, 17 ஆகஸ்ட், 2019

மக்கள் நல கூட்டணி .. தமிழ்நாட்டின் இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணம்?

LRJ : தமிழ்நாட்டின் தனித்துவமான சமூகநீதியுடனான வளர்ச்சியின்
முதுகெலும்பு அதன் தற்சார்பு பொருளாதார வல்லமை. அதை படிப்படியாக திட்டமிட்டு உருவாக்கியவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் காமராஜர்.
அந்த முதுகெலும்பு இன்று சுக்கல் சுக்கலாக நொறுங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கான பல காரணங்களில் முதன்மையானது 2016 ஆண்டில் நடந்திருக்க வேண்டிய தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்தை தங்களின் கடைந்தெடுத்த சுயநலத்துக்காக, மு க ஸ்டாலினை பழிவாங்கும் வெறிக்காக பலிகொடுத்த மநகூ என்கிற ஐந்தாம் படை அமைத்த அரசியல் அடியாள் கும்பல்.
அவர்கள் எல்லோருமே இன்றைய தமிழ்நாட்டின் எல்லா பேரவலங்களுக்கும் பொருளாதார பேரழிவுக்கும் முதன்மையான குற்றவாளிகள்.
இவர்களில் யாருக்கேனும் கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சியும் மனசாட்சியும் மிச்சமிருக்குமானால் தமிழ்நாட்டுக்கு தாங்கள் செய்த வரலாற்று துரோகத்துக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும்.
குறைந்தபட்சம் தாங்கள் செய்தது மறக்கமுடியாத மறக்கவும் கூடாத வரலாற்றுப்பெரும்பிழை என்பதையேனும் பொதுவில் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அதை செய்யாதவரை இந்த அடியாள் கும்பலுக்கு எந்த அரசியல் பெறுமதியும் இல்லை. ஏனெனில் இதுகள் அடுத்தும் இதேபோன்ற இன்னொரு ஐந்தாம் படை அமைத்து தங்களின் அடியாள் வேலையையே எதிர்காலத்திலும் தொடருவார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக