வியாழன், 29 ஆகஸ்ட், 2019

தென்காசி எம்.பி. தனுஷ் குமாரின் சித்தப்பா கொலை.... -போதை இளைஞர்களின் வெறிச்செ..

rajapalayam incident... police arrest the Guiltyrajapalayam incident... police arrest the Guilty nakkheeran.in - cnramki இராஜபாளையம் -  தேவதானம் பகுதியில் தென்காசி திமுக எம்.பி. தனுஷ் எம்.குமாரின் சித்தப்பா கருப்பையா, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். உடலைக் கைப்பற்றி சேத்தூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முன்விரோதம் காரணமாக  அதே பகுதியைச் சேர்ந்த  ராஜேந்திரன்  (வயது 19),   விக்னேஷ்  (வயது 18)  ஆகியோர் கருப்பையாவைக் கொலை செய்தனர் என்பதைக் கண்டுபிடித்தனர்.  கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைச் சுற்றிவளைத்துக் கைது செய்திருக்கின்றனர். 
அப்படி என்ன முன்விரோதமாம்?
கடந்த மாதம் நடந்த கோவில் திருவிழாவில் குடித்துவிட்டு வந்து போதையில் தகராறு செய்த ராஜேந்திரனையும் விக்னேஷையும் சமுதாயத் தலைவரான கருப்பையா கண்டித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் அடி விழுந்திருக்கிறது. அதற்குப் பழி தீர்க்கவே கருப்பையாவைக் கொலை செய்தோம் என்று கைதான இருவரும் வாக்குமூலம் அளித்திருப்பதாகச் சொல்கிறது காவல்துறை வட்டாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக