வியாழன், 29 ஆகஸ்ட், 2019

விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை

விரைவில் இந்தியாவுடன் இறுதிப் போர்... பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை/tamil.news18.com : இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் நடக்கும் - பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் எச்சரித்துள்ளார். அவருடைய பேச்சு உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பேசிய ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், காஷ்மீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்றால், ஐ.நா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
காஷ்மீர் மக்களுடன் பாகிஸ்தான் அரசு துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுடன் இனியும் பேச்சுவார்த்தை நடத்துவது முட்டாள்தனம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் நடக்கும் என்றும் குறிப்பிட்ட அவர் இந்தப் போரானது இருநாடுகள் இடையே நடைபெறும் இறுதிப்போர் என ரஷீத் எச்சரித்துள்ளார். அவருடைய பேச்சு உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக