மாலைமலர் : தொழில் அதிபர் சித்தார்த் தற்கொலை
செய்துகொண்டது நம்ப முடியவில்லை என போலீஸ் இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த
சந்தீப் பட்டீல் பெங்களூரு மாநகர போலீஸ் இணை கமிஷனராக பணி இடமாற்றம்
செய்யப்பட்டார். இந்தநிலையில் நேற்று காலை மங்களூருவில் சந்தீப் பட்டீல்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘கபே காபி டே’ அதிபரும், தொழில் அதிபரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த் மங்களூரு அருகே நேத்ராவதி
ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் சில
மர்ம முடிச்சுகள் உள்ளன.
இதுவரையில் நடந்த விசாரணையிலும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும்
சித்தார்த்தின் வழக்கு தற்கொலை என்று நம்பப்படுகிறது.
இன்னும் நிறைய கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக சித்தார்த் அணிந்திருந்த ‘டி-சர்ட்’ அவருடைய உடலில் இல்லை. அந்த ‘டி-சர்ட்’ அவருடைய உடலில் இல்லாததால், அவர் உண்மையாகவே தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்பதை உறுதிபட நம்பமுடியவில்லை. இவ்வாறு சந்தீப் பட்டீல் கூறினா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக