
தினகரன் :
ஆம்பூர்: ஆம்பூரில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில்
நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதுகுறித்து, ஆம்பூர் உதவி தேர்தல்
நடத்தும் அலுவலர் சுஜாதா, நேற்று முன்தினம் அங்கு சென்று திருமண
மண்டபத்திற்கு சீல்’’ வைத்தார். பின்னர் கூட்டத்திற்கு உரிய அனுமதி
பெறவில்லை எனவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாகவும் திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர்
ஆனந்த் உள்ளிட்டோர் மீது ஆம்பூர்
டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஆம்பூர் டிஎஸ்பி
சச்சிதானந்தம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே திருமண மண்டபத்திற்கு
வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
செய்யப்பட்டுள்ளது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக