திங்கள், 15 ஜூலை, 2019

நீதிபதிகளை மை லார்ட் என்று இனி அழைக்கதேவை இல்லை.. ராஜஸ்தான் நீதிபதி ..

மாலைமலர் :ராஜஸ்தான் மாநிலத்தில் நீதிபதிகளை இனி வக்கீல்கள் ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என வழக்கறிஞர்களை அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதிகளை இனி ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம்
ஜெய்ப்பூர்: வெள்ளையர்கள் நம் நாட்டை ஆண்டபோது பிரிட்டன் நாட்டை சேர்ந்த சிலர் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி வகித்தனர். அங்கு நடைபெறும் வழக்கு விசாரணைகளில் முன்னர் ஆஜரான நீதிபதிகளை வக்கீல்கள் ‘மேன்மை தங்கிய எஜமானரே’ என்னும் பொருள்பட மை லார்ட்’ என்று அழைத்துப் பேசுவது மரியாதைசார்ந்த மரபாக இருந்து வந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் காலப்போக்கில் பல உயர் நீதிமன்றங்களில் இந்த பழக்கம் வழக்கொழிந்து போனது. ஆனால், சில நீதிமன்றங்களில் இது இன்னும் நடைமுறையில் உள்ளது. வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் நீதிபதிகள் இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என குறிப்பிட்டுள்ள அம்சத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் வக்கீல்கள் நீதிபதிகளை இனி ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என ராஜஸ்தான் மாநில ஐகோர்ட் இன்று அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக