சனி, 27 ஜூலை, 2019

அமெரிக்க வாழ் இந்தியர்கள் சுயலாபத்திற்காக​ முன்னெடுக்கும் பாசிசத்தை பாருங்கள்

JP Terry : Fascist attitude of the Indians:
கீரின்கார்டு போன்ற​ தங்களின் சுயலாபத்திற்காக​ இந்தியர்கள் முன்னெடுக்கும் பாசிசத்தை பாருங்கள். நீங்கள் ஆதரிக்கும் இந்துத்துவ கும்பலின் லட்சணம் இது தான்.
இந்த​ பணத்தில் சிறுதுளியை எங்கள் ஊர்பகுதியில் இருக்கும் வறியநிலை​ உயர்சாதியினரின் கல்விக்காக​ இவர்கள் முதலீடு செய்தாலே அவர்களின் பொருளாதார​ நிலையும் வாழ்க்கை தரமும் கணிசமாக​ உயரும். இதை ஏன் இந்துத்துவவாதிகள் செய்வதில்லை? இதை நோக்கி கேள்வி கேட்க​ வேண்டிய​ இந்துமத​ ஆர்வலர்கள் அதனை செய்யாமல் அனிதா போன்ற​ ஓடுக்கப்பட்ட​ மக்களின் உரிமைகளை பறித்து அதனை பாசிசவாதிகள் கையில் ஓப்படைப்பது தான் ஏன்?
பிழைப்பு தேடி கைபர் போலன் கணவாய் வழியாக​ நம் மண்ணில் நுழைந்து தன் சுயலாபத்திற்காக​ சாதியை கொண்டு வந்து நம் மண்ணின் மக்களை ஓடுக்கிய​ இந்துத்துவா இன்று அது போன்ற​ பாசிசத்தை பிற​ நாடுகளிலும் முன்னெடுத்து அங்கேயிருக்கும் விளிம்புநிலை மக்களை ஓடுக்கி சுயலாபம் அடைய​ முயல்கிறது.
சொந்த​ நாட்டில் இருப்பவர்களை மதத்தின் பெயரால் சண்டையிட​ தூண்டிவிடுகிறார்கள் இந்த​ இந்துத்துவவாதிகள். ஆனால் அவர்கள் மட்டும் அரபியர்களுக்கும் மேலைநாட்டு கிறிஸ்தவர்களுக்கும் சேவகம் செய்து சுயலாபம் அடைகிறார்கள். ஏன் எந்த​ ஒரு இந்துமத​ ஆர்வலரும் இதனை கேள்வி கேட்பதில்லை?

வெளிநாடுகளில் கட்டப்படும் இந்து கோவில்கள் மூலமாக​ உருவாகும் அர்ச்சகர், ஆலய​ நிர்வாகம் போன்ற​ பதவிகளை அதிக​ பணம் சம்பாதிக்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து பெறுவது ஏன்? அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான பணக்கார​ பார்ப்பனர்கள் இதன் மூலம் கீரின்கார்டு பெற்றிருக்கிறார்கள். இந்த​ வாய்ப்பை ஏன் எங்கள் ஊர் பகுதியில் வறியநிலையில் இருக்கும் ஏழை சைவபிள்ளைமார், ஏழை பார்ப்பனர் போன்ற வறியநிலை உயர்சாதியினருக்கு கொடுத்து ஏன் அவர்கள் வாழ்க்கை தரத்தை இந்துத்துவாதிகள் உயர்த்துவதில்லை? ஏன் தொடர்ந்து பணக்கார​ பார்ப்பன உயர்சாதி வர்க்கமே தொடர்ந்து பலன் பெறுகிறது?
இவற்றை நோக்கி இந்துமத​ ஆர்வலர்களும் காவலர்களும் கேள்வி கேட்காமல் அனிதா போன்ற​ ஓடுக்கப்பட்ட​ விளிம்புநிலை மக்களின் உரிமைகளை பறித்து அதனை பணக்கார​ வர்க்கத்திடம் கொடுப்பது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக