சனி, 27 ஜூலை, 2019

ஒ.பன்னீர்செல்வம் : அப்துல் கலாம் இன் கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம்

tamil.oneindia.com : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின்
Everyone Work For APJ Abdul Kalams dream come true; O.Panneerselvam Tweet நினைவுநாளான இன்று, அவரது கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம் என, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அப்துல் கலாம், 2015ம் ஆண்டின் இதேநாளில் (ஜூலை 27), ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மெண்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை, ஒட்டு மொத்த நாடே அனுசரித்து வருகிறது. அவரது நினைவிடம் பூக்களால்அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை முதலே பலர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம். அதில், தேசத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் அப்துல் கலாம் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
"இந்தியா வல்லரசாக வேண்டும்" என்ற கலாமின் கனவு மெய்ப்பட அனைவரும் அயராது உழைக்க உறுதி ஏற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனவு காணுங்கள்; கனவுகளை எண்ணங்களாக்கி எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக