வியாழன், 4 ஜூலை, 2019

காதலி பேச மறுத்ததால் கொலை .. . தூத்துக்குடி

மகாராணி ஆஸ்பத்திரி tamil.oneindia.com/authors/hemavandhana. : கள்ளக்காதல் விவகாரம்.. பெண் கொலை.. காதலன் சரண்-வீடியோ தூத்துக்குடி: இளவரசனுடன் மகாராணி பேசவே இல்லையாம். அதனால்தான் கொலை செய்துள்ளாராம். கதை இல்லை.. நிஜமாகவே இறந்தவர் பெயர் மகாராணி, கொலையாளி பெயர் இளவரசர்!
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த தம்பதி நடேசன் - மகாராணி. நடேசன், கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார்.
மகாராணிக்கு 28 வயதாகிறது. இவர்களுக்கு விம்ரித் என்ற 5 வயது மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத்தன்று, நடேசன் வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டார். மகனும் ஸ்கூலுக்கு போய்விட்டான். அப்போது, மகாராணியின் தந்தை உலகமுத்து மதியம் மகளை பார்க்க வீட்டுக்கு வந்தபோது, மகாராணி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி உள்ளார். இதை கண்டு அலறிய உலகமுத்து, மகளை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல முயன்றார், ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது.
இது சம்பந்தமாக சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மோப்ப நாயுடன் வந்து விசாரணை ஆரம்பித்தனர். வீட்டில் மகாராணி தனியா இருப்பதை அறிந்து யாரோ கொலை செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடிந்ததே தவிர, உண்மையான காரணம் தெரியாமல் போலீஸ் திணறியது. எனினும், இளவரசன் என்பவர் மீது சந்தேகம் வந்தது.

இவர்தான் மகாராணியுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. இந்த நிலையில் தென்காசி கோர்ட்டில் இளவரசன் சரண் அடைந்துள்ளார். எதற்காக கொலை செய்தார் என்று போலீசாரிடம் சொன்னதாவது:

 "என்கூட பேசுறது மகாராணியின் புருஷனுக்கு தெரிஞ்சு போச்சு. அதனால் மனைவியை கண்டித்து இருக்கிறார்.

அந்த பேச்சை கேட்டு கொண்டு, என்கூட மகாராணி பேசவே இல்லை. அந்த ஆத்திரத்தில்தான், அவரை வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொன்னுட்டேன்" என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக