செவ்வாய், 16 ஜூலை, 2019

தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்த தலித் இளைஞர் சதீஷ்குமார் படுகொலை!

அதிகரிக்கும் சாதி ஆணவப் படுகொலை: தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்த இளைஞர் படுகொலை!LRJ : தலித்திய தூய்மைவாதிகள் மற்றும் அவர்களின் ஆஸ்தான நிலைய வித்வானான என்ஜிஓ போராளிகளின் பிரத்யேக தலித்திய அளவுகோலின் கீழ் இதெல்லாம் ஜாதி ஆணவப்படுகொலைகளாக பொங்க முடியாத சங்கதிகள். அதனால் அவர்கள் கவனமாக அமைதியாக கடந்து செல்வார்கள். சந்தேகம் இருப்பவர்கள் திருமாவின் சொந்த மாவட்டத்தில் அருந்ததிய இளைஞரை காதலித்து திருமணம் செய்த தலித் பெண்ணை அவர் குடும்பமே கொன்று எதிர்த்ததாக அருந்ததிய இளைஞன் சார்பில் கரடியாக கத்திய புகாரின் கதியென்ன என்று ஒரு எட்டு தேடிப்பாருங்கள். இந்திய அரசியல் சட்டத்தின்படியே கூட இதில் தீண்டாமை வன்கொடுமை சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி வழக்கு பதிய முடியுமா என்பது சந்தேகமே ! 
kalaignarseithigal.com :; அதிகரிக்கும் சாதி ஆணவப் படுகொலை: தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்த இளைஞர் படுகொலை! இராமநாதபுரம் மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்தனால் தலித் இளைஞர் சதீஷ்குமார் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாயில் உள்ள முகிழ்த்தகம் கிராமத்தைச் சேர்ந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார். தண்ணீர் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார். இவர், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ரஞ்சனியை காதலித்துள்ளார்.

இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சனியின் தந்தை கண்டித்ததாகக் இருவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்தவாரம் சனிக்கிழமை வேலைக்குச் சென்ற அஜீத்குமார் இரவு வீடு திரும்பவில்லை. பின்னர் அவரது செல்வோனுக்கு அழைப்பு விடுத்தபோது போன் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் அஜீத் வீட்டார் அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடியுள்ளனர். அப்போது தொண்டிஅருகே உள்ள நம்புதாளை வனப்பகுதியில் சடலம் ஒன்று எறியப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது, சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அஜீத்குமார் இரு கைகளும் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். பின்னர் அவரை உடலை பிரதிபரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.


இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியினர் அஜீத்குமார் உடலைவாங்க மறுத்து மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள்யாரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை என தகவல் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக