செவ்வாய், 16 ஜூலை, 2019

மனக் குழப்பத்தில் ஏ.சி.சண்முகம். இனியும் இவங்களை நம்பணுமா?

பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம்ஏ.சி.சண்முகம்vikatan.com - ந.பொன்குமரகுருபரன் : வேலூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் கடும் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான பணப்புழக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. கூட்டணியின் சார்பில் தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர். தேர்தல் சின்னத்தைக் காரணம் காட்டி போட்டியிலிருந்து அ.ம.மு.க. விலகிவிட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சில காரணங்களால் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், ``கடந்த முறை தேர்தல் ரத்தானபோதே, ஏ.சி.எஸ் கடுமையாக மனம் உடைந்துவிட்டார். கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்த நிலையில், தேர்தல் ரத்தானதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஜெயித்தால் மத்திய அமைச்சர் ஆகவும் சில பி.ஜே.பி தலைவர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார். அத்தனையும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் தவிடுபொடியானது.



இப்போது நடைபெறவுள்ள தேர்தலில், அ.தி.மு.க, பி.ஜே.பி. இடையே நல்லுறவு இல்லை. முஸ்லிம்கள் கணிசமாக உள்ள வேலூரில், பி.ஜே.பி-யினரை பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூட அ.தி.மு.க-வினர் விரும்பவில்லை. ஆனால், வரும் ஜூலை 23-ம் தேதி அத்திவரதரை தரிசிக்க வரும் பிரதமர் மோடியை வேலூர் பிரசாரத்துக்கு அழைத்து வர ஏ.சி.எஸ் கடுமையாக முயற்சி செய்கிறார். இதுவரையில் பி.ஜே.பி-யிடம் இருந்து பாஸிட்டிவ் சிக்னல் ஏதும் கிடைக்கவில்லை. வேலூரில் ஜெயித்தாலும்கூட மத்திய அமைச்சர் பதவி கிடைக்காது என்பதையும் டெல்லியில் சொல்லிவிட்டார்கள். `பிறகு எதற்காக கோடிக்கணக்கில் கொட்டி செலவழிக்க வேண்டும்?’ என்கிற குழப்பம் ஏ.சி.எஸ்ஸுக்கு ஏற்பட்டுவிட்டது.








பிரசாரத்தில் ஏ.சி.சண்முகம்
வேட்புமனு தாக்கலின் போது அமைச்சர் கே.சி.வீரமணியுடன் ஏ.சி.சண்முகம்உள்ளூர் அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் ஏ.சி.எஸ்ஸுக்கும் நீண்ட காலமாக மனவருத்தம் இருக்கிறது. `அவர் தேர்தல் வேலை பார்த்தால் பிரசாரத்துக்குகூட நான் வரமாட்டேன்’ என அ.தி.மு.க. தலைமையிடம் ஏ.சி.எஸ் கூறிவிட்டார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. தொகுதிக்கு மூன்று அமைச்சர்கள் வீதம் 18 அமைச்சர்களை களமிறக்கி, ஏ.சி.எஸ்ஸை வெற்றி பெற வைக்க அ.தி.மு.க. தலைமை முடிவெடுத்தும், அந்த நம்பிக்கையில் ஏ.சி.எஸ். இல்லை ``மத்திய அமைச்சர் பதவியை பி.ஜே.பி மறுத்துவிட்டது, அமைச்சர்களோ நம்மிடம் பணம் பறிக்கத்தான் பார்ப்பார்கள். முதலீடு செய்தாலும் நமக்கு எந்த லாபமும் இல்லை. பிறகு எதற்காக இவர்களை நம்ப வேண்டும்?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடமே மனக்குழப்பத்தில் புலம்பியுள்ளார் ஏ.சி.எஸ்" என்றார்.
வீதிக்கு வீதி அமைச்சர்கள் நிற்பார்கள், கோடிக்கணக்கில் பணம் புரளும், வேலூரில் அ.தி.மு.க-வை வீழ்த்துவது கடினம் என தி.மு.க. யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரே மனக்குழப்பத்தில் தத்தளிப்பது வேலூர் களத்தில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உளவுத்துறை மூலமாக எடப்பாடி பழனிசாமியிடம் இத்தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். விரைவிலேயே அவர் ஏ.சி.எஸ்ஸை அழைத்து சமாதானப்படுத்துவார் என அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<
இதுகுறித்து ஏ.சி.சண்முகம் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம். ``இன்று தொண்டன்துளசியில் பிரசாரத்தை ஏ.சி.சண்முகம் தொடங்கியபோதே, அவருக்கு மக்கள் திரளாக வந்து வரவேற்புக் கொடுத்தனர். இந்தியக் குடியரசுக் கட்சி, பி.ஜே.பி., தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் எனப் பல தரப்பினரும் அவருக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கின்றனர். எந்த மனவருத்தமும் அவருக்கு இல்லை. உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றி வருகிறார். தேர்தல் பணியாற்றுபவர்களுக்கென ஆம்பூர், வாணியம்பாடியில் உள்ள பிரியாணிக் கடைகளில் இருந்து பிரியாணிக்கு சிறப்பு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.




அமைசர் கே.சி.வீரமணியுடன் ஏ.சி.சண்முகம்




அமைசர் கே.சி.வீரமணியுடன் ஏ.சி.சண்முகம்
அமைச்சர் கே.சி.வீரமணியுடன் அவருக்கு மனக்கசப்பு இருப்பதாக, தி.மு.க வட்டாரங்கள்தான் பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. அதன்மூலம் இருவருக்குமிடையே கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்த அவர்கள் முயலுகின்றனர். மற்றபடி, ஏ.சி.எஸ்ஸுக்கு எந்த மனவருத்தமும் இல்லை'' என்பதோடு முடித்துக்கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக