செவ்வாய், 2 ஜூலை, 2019

இசக்கி சுப்பையாவுக்கு எடப்பாடியின் `70 கோடி' அழுத்தம்.. அதிமுகவுக்கு ஓடியதன் மர்மம்

இசக்கி சுப்பையாvikatan.com - -vijayanand.a" : கடந்த வாரம்கூட பொதுச் செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து நீண்டநேரம் பேசினார் இசக்கி. அப்போதுகூட இப்படியொரு முடிவில் அவர் இருப்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. அசோக் நகரில் உள்ள கட்டடமானது, 35 மாதகால குத்தகை அடிப்படையில் இயங்கி வருகிறது. அதற்கு முறையாகப் பணம் செலுத்தியிருப்பதால் தொடர்ந்து அலுவலகம் செயல்படுவதில் தடங்கல் இல்லை.
`பழைய பேலன்ஸை வாங்கிக்கொண்டு கட்சியில் சேருங்கள்!' - இசக்கி சுப்பையாவுக்கு எடப்பாடியின் `70 கோடி' அழுத்தம்தென்காசியில் அ.தி.மு.க உடனான இணைப்பு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார் அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் இசக்கி சுப்பையா. `மக்களின் முதல்வர் எடப்பாடி' என அவர் சூட்டிய புகழாரத்தை அ.ம.மு.க நிர்வாகிகள் ரசிக்கவில்லை. `தமிழக அரசிடமிருந்து அவருக்கு 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தப் பணம் வர வேண்டியிருக்கிறது. இதையே துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில்.

சென்னை அசோக் நகரில் அம்மா முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான கட்டடம் இது. தற்போது அ.தி.மு.க-வில் இசக்கி சுப்பையா ஐக்கியமாக இருப்பதால், `இந்தக் கட்டடத்தில் இனி அ.ம.மு.க இயங்குமா?' என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. `கடந்த வாரம்கூட பொதுச் செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து நீண்டநேரம் பேசினார் இசக்கி. அப்போதுகூட இப்படியொரு முடிவில் அவர் இருப்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. அசோக் நகரில் உள்ள கட்டடமானது, 35 மாதகால குத்தகை அடிப்படையில் இயங்கி வருகிறது. அதற்கு முறையாகப் பணம் செலுத்தியிருப்பதால் தொடர்ந்து அலுவலகம் செயல்படுவதில் தடங்கல் இல்லை. தற்போது இசக்கி சுப்பையாவுடன் மோதல் வலுத்துவிட்டதால் இந்தக் கட்டடத்தில் தொடர்ந்து இயங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். 
இசக்கி சுப்பையா மனமாற்றத்தின் பின்னணி என்ன? 
தென்காசி, அம்பை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா, 48 நாள்கள் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவர் மீதான அதிருப்தி காரணமாகக் கடந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமை சீட் வழங்கவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தினகரனின் ஆதரவாளராக வலம் வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லைத் தொகுதியில் போட்டியிட விரும்பியவருக்கு, தென்சென்னை தொகுதியை ஒதுக்கீடு செய்தார் தினகரன். இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். ``தேர்தல் செலவுகளைவிடவும் இசக்கி சுப்பையா மனமாற்றத்தின் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் உள்ளன" என விவரித்த அ.ம.மு.க மூத்த நிர்வாகி ஒருவர்,
தினகரனுடன் இசக்கி சுப்பையா
``தமிழக அரசில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வருகிறார் இசக்கி சுப்பையா. அ.ம.மு.க-வில் இணைந்த பிறகு, இந்தப் பணிகளுக்காகச் சென்று சேர வேண்டிய பில்களைக் கிடப்பில் போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. உள்ளாட்சித்துறையில் ஏராளமான பணிகளை எடுத்துச் செய்து வந்தார். அந்தவகையில் சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அரசு தரப்பிலிருந்து கொடுக்க வேண்டியுள்ளது. தினகரனோடு சேர்ந்துகொண்டு அ.தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால், அடுத்தடுத்த ஒப்பந்தப் பணிகளில் புறக்கணிக்கப்பட்டார் இசக்கி சுப்பையா.

அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளாகக் கடுமையான நெருக்கடியில் இருந்தார். தொடர்ச்சியாகப் பணிகள் இருந்தால்தான் தொழிலும் நல்லபடியாக நடக்கும். அவரை வீழ்த்துவதற்கு இந்த ஓர் ஆயுதத்தை மட்டுமே கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அ.ம.மு.க-விலிருந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் தென்மண்டல பிரமுகர் மூலமாகவே இசக்கி சுப்பையாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. `பழைய பேலன்ஸை வாங்கிக்கொண்டு கான்ட்ராக்டைத் தொடருங்கள்' என முதல்வர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், அவரும் அதை ஏற்றுக்கொண்டார். தினகரன் குடும்பத்தோடு அதிக நெருக்கத்தில் இருந்தாலும், தொழில்ரீதியான நெருக்கடியால் அ.தி.மு.க-வில் இணையும் முடிவுக்குத் தள்ளப்பட்டார் இசக்கி. வரும் 6-ம் தேதி தென்காசியில் நடக்கவிருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணையவிருக்கிறார்" என்கின்றனர் விரிவாக.
தினகரன்
இசக்கி சுப்பையா விலகல் குறித்துப் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ``கட்சியைவிட்டு வெளியே போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவை. இசக்கி சுப்பையா பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய தொகைகள் அதிகம் உள்ளன. வேலுமணி அதிகப்படியான தொல்லைகளைத் தருகிறார் எனச் சொல்வார். நாங்கள் இப்போது தோல்வியடைந்ததால் அவர் போகலாம். எங்களுக்கு இது பின்னடைவா என்பதை வருங்காலம் முடிவு செய்யும். ஏற்கெனவே இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ-வாக இருந்தவர். 48 நாள் ஒரு மண்டலத்துக்கு அமைச்சராக இருந்தவர். அவர் யாரைக் குறை சொல்கிறாரோ, அவர் சொல்லித்தான் இசக்கி சுப்பையாவுக்குப் பதவி கொடுத்தோம். எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்துபோய்விட்டோமா. பன்னீர்செல்வமும் எங்களை எதிர்ப்பதால் அழிந்துபோய்விட்டோமா. எங்களால் கை காட்டப்பட்ட நிர்வாகிகள் வேறு இடம் தேடிப்போவதால் இன்னும் வலுவடைவோமே தவிர பாதிக்கப்பட மாட்டோம்" என்றார் ஆவேசத்துடன்.
பெங்களூரு புகழேந்தி
தினகரனின் பேட்டியைக் கவனித்த இசக்கி சுப்பையா, ``தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. ஒரு தலைவருக்கு அழகல்ல. அவர் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் ஈர்க்கப்பட்டுத்தான் கட்சிக்கு வந்தோம். ஜூலை 6-ம் தேதி அ.தி.மு.க-வில் 20,000 தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய்க் கழகத்துக்கே செல்கிறோம்" என விளக்கமளித்தார்.
இசக்கி சுப்பையா `மன மாற்றம்' குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ``தி.மு.க-வை விட்டு வைகோ விலகியபோது ஏராளமான மாவட்டச் செயலாளர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர். `இனி தி.மு.க அவ்வளவுதான்' எனப் பேசினர். ஆனால், முன்பைவிட வலுவாக அரசியல் களத்தில் தி.மு.க மீண்டெழுந்தது. அதைப்போலத்தான் இந்த இயக்கத்திலிருந்து யார் விலகினாலும் அ.ம.மு.க இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கும். அ.ம.மு.க-வில் இருப்பதால் இசக்கி சுப்பையாவின் எதிர்கால ஒப்பந்தப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதுகிறார். அவரது ஒப்பந்தப் பணிகள் சிறக்க எங்களுடைய வாழ்த்துகள்" என்றார் நிதானமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக