வியாழன், 18 ஜூலை, 2019

மாயாவதியின் சகோதரர் பெயரில் இருந்த 400 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்


வெப்துனியா :நம் தமிழ்நாட்டில் அதிமுக - திமுக போன்று, உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ்  - சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகளும் எப்போதும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்தன.
ஆனால் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்றக்கடிக்க வேண்டும் என்பதற்க்காக பகுஜன் சமாஜ்  - சமாஜ்வாதி கட்சிகள் பகையை கூட்டணி வைத்தன. இதையும் தாண்டி பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து தற்போது இவ்விரு கட்சிகளின் கூட்டணி முடிவுக்கு வந்து பாதியிலேயே பிரிந்தது.
இந்நிலையில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மயாவதியின் சகோதரருக்கு சொந்தமானது எனப்படும் ரூ. 400 கோடி மதிப்புள்ள வீட்டுமனையை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பினாமி பரிவர்த்தனைகள் தடுப்புச்சட்டத்தி கீழ், பினாமி சொத்துக்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித்துறையினருக்கு மத்திய அரசு ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

;மேலும்  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அவரது சகோதரர் ஆனந்தகுமார் மற்றும் அவரது மனைவி விச்சிடெர் லதா ஆகியோரிடம், நொய்டாவில் ரூ. 400 கோடி ரூபாய் சொத்து குறித்து,வாங்கியதாக தெரிவித்துள்ள தகவல்கள் அடிப்படையில் வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.
ஆனால் மாயாவதியின் சகோதரரிடமிருந்து இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கப்படாததால் சுமார் 3 லட்சத்துக்கு 4 ஆயிரத்து 920 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டி மனையை வருமான வரித்துறையினரின் , டெல்லி பினாமி தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் பகுஜன் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக