வியாழன், 18 ஜூலை, 2019

தமிழச்சி தங்கபாண்டியன் ... முதல் பேச்சில் முழக்கம்... நாடாளுமன்றத்தில் வீசிய திராவிட காற்று .. வீடியோ


devisomasundaram : தமிழச்சியோட நாடளுமன்ற முதல் உரையை  பார்த்தப்போ சட்டுன்னு தோணினது கண்ணகி வழக்குரை காதை தான் .
தான் எங்கேர்ந்து வரேன்னு மொதல்ல சொல்லி அதுலயே நீதி தந்தே ஆகனும்ன்ற அழுத்த்தை தரா
ஆரம்பிக்கும் போதே டேய் நீ எனக்கு சமம்  இல்லடா என் ஊரு பாத்து இமையவர் அசந்து போறாங்கன்னு ஆரம்பிப்பான் இளங்கோ ..எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப...
அடுத்த வரில புள்ளுறு புன்கண்...புறாவுக்கே நீதி தந்த ஊர் என் ஊர் .ஆவின் கடைமணி உகுநீர் .வாசல்ல நீதி கேட்டு வந்த பசுவுக்கு நீதி வழங்கியவன் என் மன்னன்னு முன்னாடியே எதிரிய சிக்க வைக்கிறா ... ஏன்னா அவ நீதி கேட்டு தான் வந்துருக்கா ...சாதாரண பெண்ணுக்கு நீதி கிடைக்காம போகலம்... அப்டிலாம்  தப்பி ஓடிவிட  கூடாதுன்னு பாண்டியனுக்கு   தடை  வைக்கிறா . விலங்குக்கே நீதி தந்த ஊர் டா என் ஊர் ...எனக்கு நீதி தந்தே ஆவனும்னு இழுத்து கோக்றா

தமிழச்சி அதே வேகத்துல ஆரம்பிக்கிறாஙக ...யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு அன்ப போதிக்கும் மண் என் மண் நீ தமிழன நேசிச்சே ஆகனும்ன்ற நிர்பந்தத்தை உருவாக்ற தொனி...
வள்ளுவன அடுத்து ஆயுதமா எடுக்கறாங்க .. பிறப்பொக்கும் எல்லா உயிர்கும்னு வர்ணாசிரமத்தை உடைச்ச ஊர் என் ஊர் ...நீ இன்னும் பிடிச்சுட்டு தொங்கிறியே வெக்கமா இல்லியான்ற தொனி .

பெரியார் தந்த சமுக நீதி மண் லேர்ந்து வரேன்னு தொடர்ந்து தன் அடையாளத்தை  எதுன்னு அழுத்தமா பதிய
வைக்கிறார் .
கலைஞர் ஸ்டாலின்னு தன் கொள்கை தலைமைகளை அடையாள படுத்தி நான் உன்னை விட எத்தனை உயர்வான இடத்தில இருக்கேன் பார்ன்னு நிறுவறாங்க ....
கடைசில தன் அப்பா வோட இடம் உரைத்து ..மாசாத்துவான் மருமகள்னு உரைத்த கண்ணகி மாதிரி அந்த அவை .முழுதும் நிரம்பிய தமிழில் ஜொலிக்கிறார் .
மத சார்பின்மை (செக்குலரிசம்) வார்த்தைக்கு அலறும் பி ஜே பி சிரிப்ப வர வைத்தது ..
#எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி#
.
தொடர்ந்து நிர்மலாவை விளாசும் காட்சிகளை பாருங்க .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக