புதன், 19 ஜூன், 2019

நடிகர் சங்க தேர்தல் தடை .. எம்ஜியார் ஜானகி கல்லூரியில் நடத்த முடியாது .. உயர்நீதிமன்றம்

நடிகர் விஷால்சென்னை உயர்நீதிமன்றம்அலாவுதின் ஹுசைன் - விகடன் : “எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம்
 நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதி அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடக்கும் எனத் தேர்தல் அதிகாரி நீதிபதி பத்மநாபன் அறிவித்திருந்தார். இதற்கென கல்லூரி நிர்வாகத்திடமிருந்தும் அனுமதி கடிதம் பெற்றிருந்தார்.
இதனிடையே அந்தக் கல்லூரி, நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கு வசதியான இடம் இல்லை என நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் நீதிபதிகள், அமைச்சர்கள் என முக்கியமானவர்கள் இருக்கும் இடம் அது என்பதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்தது.

இதனையடுத்து, விஷால், காவல்துறை ஆணையரைப் சந்தித்துத் தேர்தலுக்கு உகந்த பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டிருந்தார். அது மட்டுமன்றி, 23-ம் தேதி அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த பாதுகாப்பு வழங்கக்கோரி அவர் உயர்நீதிமன்றத்திலும் வழக்கும் தொடுத்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், “எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
“தேர்தல் நடக்கும் அதேநாள், அதே இடத்தில் ‘அல்வா’ நாடகம்! என்ன நடக்கிறது நடிகர் சங்கத்தில்?!” மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை நாளை தெரிவிக்க நடிகர் சங்கத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நந்தனம் YMCA, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களைத் தேர்வு செய்ய நடிகர் சங்கத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பின் இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல் போல் நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என நீதிபதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.< தேர்தலுக்கு 21 நாள்கள் முன்னரே உறுப்பினர்களுக்குத் தேர்தல் குறித்த அறிவிப்பை நிர்வாகம் வெளியிட வேண்டும் என்று நடிகர் சங்க விதிமுறைகள் இருப்பதால் நடிகர் சங்க தேர்தல் 23-ம் தேதி நடக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக