புதன், 19 ஜூன், 2019

இந்தியில் பதவி பிரமாணம் எடுத்த மலையாள எம்பியை கண்டித்த சோனியா ..ஏன் மலையாளத்தில் கூறிவில்லை ?

கொடிகுன்னில் சுரேஷ்Sonia Gandhi asked other MPs from Kerala to deliver the oath in Malayalam.
ஆ.பழனியப்பன் விகடன் :
 காங்கிரஸ் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, மேசையைத் தட்டி பாராட்டினார் பிரதமர் மோடி. ஆனால், அந்த எம்.பி-யை அழைத்துக் கடிந்துகொண்டார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி.
என்ன நடந்தது?: கேரளாவிலிருந்து 7-வது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், கொடிகுன்னில் சுரேஷ். இவர், கேரளாவில் அமைச்சராகவும் இருந்தவர். திங்கள்கிழமையன்று, நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்தித் திணிப்பு என்கிற சர்ச்சை தீவிரமடைந்த இந்தக் காலகட்டத்தில், இந்தி மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்
கொடிகுன்னில் சுரேஷ். உடனே, பிரதமர் மோடியும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மேசையைத் தட்டிப் பாராட்டினர். அதைத் தொடர்ந்து மற்ற பி.ஜே.பி எம்.பி-க்களும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு தன் இருக்கைக்குச் சென்ற சுரேஷை, சோனியா காந்தி கடிந்துகொண்டார் என்றும், ஏன் மலையாளத்தில் பதவிப்பிரமாணம் எடுக்காமல்,
இந்தியில் எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த எல்லா எம்.பி-க்களையும் மலையாளத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு சோனியா கூறியிருக்கிறார்.
“ஏன் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்தீர்கள் என்று சோனியா காந்தி கேட்டார். நான் ஏற்கெனவே ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளேன். எனவே, இந்த முறை ஒரு மாற்றத்துக்காக இந்தியைத் தேர்வுசெய்தேன் என்று சொன்னேன்” என்று செய்தியாளர்களிடம் கொடிகுன்னில் கூறியிருக்கிறார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்

  thenewsminute.com/a :  Reportedly, Sonia expressed displeasure with Kodikunnil for delivering the oath in Hindi, as various states seek to oppose the Central government’s move to impose Hindi in different quarters.
After Kodikunnil went back to his seat following the oath, Sonia Gandhi reportedly asked him why he delivered oath in Hindi and not Malayalam, Madhyamam reports.
Following this, Sonia Gandhi asked other MPs from Kerala to deliver the oath in Malayalam itself.
“Sonia Gandhi asked why I took oath in Hindi. I had taken oath in English last time, so this time I opted for Hindi for a change,” Kodikunnil told the media.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக