திங்கள், 10 ஜூன், 2019

தமிழிசைக்கு முன்பாக பாஜக ஒழிக என்று கோஷங்களை எழுப்பிய அவரது மகன் சுகனாதன்

ஆடியோவை நீக்கி விட்டார்கள் ஆனாலும் அவரை தொண்டர்கள் தள்ளி கொண்டு செல்வது தெரிகிறது

வெப்துனியா : தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனின் மகன் அவருக்கு முன்பே பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்று சென்னை விமான நிலையத்தில் செயதியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கொண்டிருந்தபோது திடீரென அந்த இடத்திற்கு வந்த தமிழிசையின் மகன் சுகநாதன் பாஜகவுக்கும் தமிழிசைக்கும் எதிராக எதிராக கோஷங்களை எழுப்பினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழிசையின் ஆணைக்கேற்ப அவருடைய பாதுகாவலர்கள் சுகந்தனை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, 'தனக்கும் தனது மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருப்பதாகவும், இதன் காரணமாகவே தனது மகன் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டதாகவும் விளக்கமளித்தார். மேலும் அதிமுகவின் ஒற்றைத்தலைமை குறித்த கேள்விக்கு 'இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதுகுறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை' என்றும் அவர் கூறினார். வெப்துனியாவைப் படிக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக