திங்கள், 10 ஜூன், 2019

அக்ஷய பாத்திரா திட்டம் ... இஞ்சி, பூண்டு, மாங்காய் இஞ்சி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இம்யூனிட்டிக்கு அவசியம்

Shalini : இஞ்சி, பூண்டு இரண்டிற்குமே ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. இந்த இரண்டும் உட்க்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பிறகு ஏன் அக்‌ஷய பாத்ரா திட்டத்தில் இவற்றை சேர்க்க மறுக்கிறார்கள்?
சமணர்கள் பூமிக்கு அடியில் விளையும் உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. அதனால் அவர்கள் கேரட், முள்ளங்கி, கிழங்குகள் என்று பல ருசிகரமான உணவுகளை ஜீவகாருண்யம் கருதி உட்கொள்வதில்லை. இதற்கும் ஜீவகாருண்யத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசித்தால்: பூமிக்கு அடியில் விளையும் உணவுகள், புதைத்து வைத்தால் மீண்டும் முழு செடியாக வளர்வதினால், அந்த ஜீவனை உட்கொண்டு நாம் வாழ நினைப்பது ஹிம்சை என்று சமணர்கள் கருதுகிறார்கள்.
அக்‌ஷய பாத்ராவை நடத்துபவர் சமணரா என்றால் இல்லை. பிறகு ஏன் அவர்கள் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை இவ்வளவு பெரிய இஷு ஆக்குகிறார்கள்?
சமணரை போல பிராமணர்களும் இஞ்சி பூண்டு சாப்பிடுவதில்லை. பிராமணர்கள் ஸ்மார்த்த மதத்தை கடைபிடிக்க வேண்டியவர்கள், ஸ்மார்த்த மதம் அகிம்சையை போதிப்பதில்லை. ஸ்மார்த்தர்கள் சகல விதமான அசைவ உணவும் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள்.... ஆனால் கலச்சார கொடுக்கல் வாங்கலில் அவர்கள் தங்கள் ஸ்மார்த்த் கோட்பாடுகள் பலதையும் கைவிட்டனர் - சமண பெயர்களை ஏற்றுக்கொண்டனர். இன்றும் பல பிராமணர்களின் பெயர் ஷர்மா என்றே முடியும். திரு ஹெச் ராஜாவின் முழு பெயர், ராஜா ஹரிஹர ஷர்மா. இந்த ஷர்மானாம் = ஸ்ரமண = சமண என்கிற பதத்தின் திரிபு தான்.


ஆக சமண முறைகளை தமதாக்கிக்கொண்ட பிராமணர்கள் உணவில் அஹிம்சையை கடைபிடிக்கலாயினர். அதனால் நோ பூண்டு நோ வெங்காயம்.
இது அறிவியலா என்றால் இல்லை, ஒரு உணவை மனிதர் அதிகமாக உண்ணும் போது தான் அதை அதிகமாய் பயிரிடுவர். அது அந்த செடியின் இருப்புதொகையை கூட்டுமே தவிற குறைக்காது. சமணர்கள் உழவு தொழிலில் ஈடுபடாததால் the private life of plants பற்றி அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. சமணர்கள் உழவு தொழில் செய்யாதது ஏன்? ஸேம் ஜீவகாருண்யம் இஷு. உழுதால் புழு பூச்செல்லாம் சாகுமே?! இப்படி ஓவராய் நுணுக்கி நுணுக்கி ஜீவமாருண்யம் பார்த்து தான் சமண ஜனதொகையே குறைந்து போகிறது. அதே வழியில் போய் பிரமாண ஜனதொகையும் குறைந்து போக வாய்ப்புண்டு....
அதனால் fitness to survive வேண்டும் என்று நினைப்பவர்கள் தவறாமல் இஞ்சி, பூண்டு, மாங்காய் இஞ்சி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று சாப்பிட்டு இம்யூனிட்டியை அதிகரித்துக்கொள்ளுங்கள்!
இந்த அக்‌ஷைய பாத்ரம் எல்லாம் மணிமேகலை காலத்து பழங்கதை! மணிமேகலை எழுதியவரே இந்த கான்செப்ட்டை கிரேக்க மாலுமிகளிடமிருந்து சுட்டாரோ என்னவோ, காரணம் கிரெக்க இதிகாசத்தில் தான் இந்த கார்னுகோப்பியா முதன்முறையில் உருவகம் பெற்றது!
இஞ்சி ஊறாத அக்ஷய பாத்ரம் ஒன்றும் அவ்வளவு சக்திவாய்ந்தாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. One condiment less என்றாலே அது உண்மையான அக்‌ஷய பாத்திரம் இல்லை!!
#கொஞ்சம்டார்வின்கொஞ்சம்டாகின்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக