vikatan.com - இ.லோகேஷ்வரி : தேர்தல்
டிஜிபி-யாக இருந்த அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி சிறப்பு
அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில், 19 ஐபிஎஸ்
அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கான உத்தரவை
உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டிருக்கிறார்.
சிறைத் துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா, தேர்தல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். தற்போது, தேர்தல் முடிவடைந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் சுக்லா சிறைத் துறை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அசுதோஷ் சுக்லா-வுக்கு இதுபோன்ற பதவிகள் வருமென்று எதிர்பார்த்ததுதான் என்கிறார்கள், காவல் துறை வட்டாரங்கள். மீண்டும் சிறைத்து றை தலைவராக அவரை பொறுப்பேற்கவிடாமல் சதி நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, சிறைச்சாலைகளில் அதிக நெருக்கடி
இருப்பதைத் தவிர்ப்பதற்காக, 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை
திருமலைசமுத்திரம் என்ற இடத்தில், திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க திட்டம்
தீட்டப்பட்டது. சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், சுமார் 30 ஏக்கர்
நிலப்பரப்பில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம்
கையகப்படுத்திவிட்டயதாகப் புகார் எழுந்துள்ளது.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டடங்கள் எழுப்பி, அங்கு கல்லூரி இயங்கிவருகிறது. இந்த இடத்தை மீட்க, சிறைத்துறை தலைவர் என்ற முறையில் அசுதோஷ் முயன்றார். ஆனால், பணபலத்தால் அது தாமதமானது. அந்த நேரத்தில்தான், தேர்தல் பணிக்கு மாற்றப்பட்டார் சுக்லா. அதேசமயம், இந்த வழக்கில் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதமாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. மேலும், சுக்லா அடுத்த டிஜிபி-யாக வருவதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. இந்நிலையில்தான், சுக்லா மண்டபம் அகதிகள் முகாமுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்
சிறைத் துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா, தேர்தல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். தற்போது, தேர்தல் முடிவடைந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் சுக்லா சிறைத் துறை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அசுதோஷ் சுக்லா-வுக்கு இதுபோன்ற பதவிகள் வருமென்று எதிர்பார்த்ததுதான் என்கிறார்கள், காவல் துறை வட்டாரங்கள். மீண்டும் சிறைத்து றை தலைவராக அவரை பொறுப்பேற்கவிடாமல் சதி நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டடங்கள் எழுப்பி, அங்கு கல்லூரி இயங்கிவருகிறது. இந்த இடத்தை மீட்க, சிறைத்துறை தலைவர் என்ற முறையில் அசுதோஷ் முயன்றார். ஆனால், பணபலத்தால் அது தாமதமானது. அந்த நேரத்தில்தான், தேர்தல் பணிக்கு மாற்றப்பட்டார் சுக்லா. அதேசமயம், இந்த வழக்கில் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதமாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. மேலும், சுக்லா அடுத்த டிஜிபி-யாக வருவதற்கான வாய்ப்பும் அதிகம் இருந்தது. இந்நிலையில்தான், சுக்லா மண்டபம் அகதிகள் முகாமுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக