vikatan.com - சக்தி தமிழ்ச்செல்வன் :
“இந்தியத் தேர்தல் ஆணையத்தினால், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல்
முடிவில், பி.ஜே.பி கூட்டணி 350 இடங்களுக்கும் அதிகமான இடங்களில்
வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், ஒப்புகைச் சீட்டு
இயந்திரமும் முதல் முறையாக பயன்படுத்தபட்டு, இந்தத் தேர்தலை
நடத்திமுடித்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில்
குளறுபடிகள் நடந்திருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 370 தொகுதிகளில் இதுபோன்ற
குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகளின்
எண்ணிக்கைக்கும், வாக்கு எண்ணிக்கையின்போது இயந்திரத்தில் எண்ணப்பட்ட
வாக்குகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் காஞ்சிபுரம்
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அன்று பதிவான வாக்குகளின்
எண்ணிக்கை 12,14,086. ஆனால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எண்ணப்பட்ட
வாக்குகள் 12,32,417. அதாவது, பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட
வாக்குகள் 18,331 அதிகம்.
அதேபோல், தருமபுரி தொகுதியில் பதிவான வாக்குகள் 11,94,440. எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 12,12,311.பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் இடையே உள்ள வித்தியாசம் 17,871. இதேபோன்று தமிழகத்திலே ஐந்து தொகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாக உள்ளது. இதேநிலை இந்தியா முழுவதும் 373 தொகுதிகளில் நிலவியுள்ளது. இந்த விவரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்திற்குத் தெரிந்து, பதிவான வாக்குகள்குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து நீக்கி உள்ளார்கள். மத்தியில் பா.ஜ.க அசுர பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், இந்தக் குளறுபடி விவகாரம் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரியிடம் கேட்டபோது, " 6 மணி வரை பதிவான ஓட்டுகள் மட்டுமே முதலில் சொல்லப்படும். அதன்பிறகு பதிவான வாக்குகள் எண்ணும்போதுதான் தெரியவரும்" என்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தல் நடந்துமுடிந்து ஒரு மாதமாகியும் இன்னமும் பதிவான வாக்குகள் சரிவர பதிவுசெய்யாமல் இருந்திருக்குமா என்னும் கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.
இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக