வியாழன், 11 ஏப்ரல், 2019

நடிகை லதா : கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் விரசமா நடிக்கலையே...

கஸ்தூரியின் விமர்சனத்துக்கு லதா எதிர்ப்பு!மின்னம்பலம் : அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நடிகை கஸ்தூரி எம்.ஜி.ஆர்., நடிகை லதா இணைந்து நடித்த பாடல் காட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். கஸ்தூரிக்கு அது தொடர்பாக எதிர்ப்புகள் வந்த நிலையில் தற்போது நடிகை லதா கஸ்தூரிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி இரவு நடைபெற்றது. அப்போது எளிய இலக்கை மிக அதிகமான பந்துகளை எதிர்கொண்டு ஆடி வெற்றி பெற்றது சென்னை அணி.

இது குறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க" என்று பதிவிட்டார். இதனால் கஸ்தூரிக்குக் கடும் எதிர்ப்பு உருவானது. இதனால் அந்த ட்விட்டை நீக்கிவிட்டார்.
தொடர்ந்து விமர்சனங்கள் வர இதற்கு விளக்கம் அளித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்" என்பதாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை லதா இது குறித்து கஸ்தூரிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டுமொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?
கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே... அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், மக்கள் திலகமும் நடிச்ச படத்தைச் சொல்லணும்...
அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா..ஒரு பெண்ணே, இன்னொரு பெண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..
இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களிலிருந்தும் கண்டனத்தை தெரிவித்துவருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக