புதன், 17 ஏப்ரல், 2019

.நீட் தேர்வு.. இனிமேலும் அனிதாக்களை இழக்காமல் இருப்போம்.

Sumathi Vijayakumar : இன்னும் ஒரு நாள். நாளை விடிந்தால் தேர்தல் நாள். முன் பொழுது ஒருவருக்கு சார்ந்து தானே இருக்கிறது. அப்பொழுதே நடுநிலைமை என்பது மாறி விடுகிறது. இன்னமும் நடுநிலைமை என்று சொல்லி கொள்பவர்கள், ஒன்று இன்னும் புரிந்து கொள்ளவில்லை, இல்லையென்றால் மக்களை குழப்பபார்க்கிறார்கள். வேறு யார் சொல்வதை தாண்டியும், அனிதாவின் குடும்பத்தின் குரல் தான் முக்கியமானதாக பார்க்கிறேன். அவர்களை தாண்டி இந்த அரசுக்கு எதிராக கோபம் கொள்ள சிறந்த காரணம் உடையவர்கள் யாரவது தமிழ்நாட்டில் இருப்பார்களா என்ன? நீட்டை திணித்த இந்த அரசுக்கு வாக்கு அளிக்காதீர்கள் என்பதோடு அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லையே. யாருக்கு வாக்களிக்க வேண்டும், எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று மிக தெளிவாய் சொல்லி இருக்கிறார்கள்.
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யாரும் அவர்கள் செய்த குற்றங்களை மறுக்கவோ, மறைக்கவோ இல்லை. நாளை அவர்கள் ஆட்சி அமைத்ததும் அவர்களையும் விமர்சனம் செய்யத்தான் போகிறார்கள். தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக அல்லாமல், மக்கள் நலனுக்காக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய பெரியார், பின்னாளில் அதே காங்கிரஸ் கட்சிக்காக, காமராஜருக்காக பிரச்சாரம் செய்தது என்ன விதமான அரசியலோ, அதே தான் இந்த தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் அரசியலும்.


ஹிட்லரை எதிர்த்த உலகம் ஆதரித்தது சர்ச்சில் - ஸ்டாலினை. சர்ச்சிலும் ஸ்டாலினும் எதிரெதிர் துருவங்கள் என்பது உலகறிந்தது. ஆனாலும் அவர்கள் கைகோர்த்த ஒரே தருணம் பாசிசத்தை வீழ்த்த. சர்ச்சில் இந்தியாவை சூறையாடி, மக்களை பஞ்சத்தில் வீழ்த்தினார் என்பதற்காக யாரும் ஹிட்லரை ஆதரிக்கவில்லை. இருவருமே மனிதகுல விரோதிகள் தான். ஆனாலும் அவர்களுக்குள் இருந்த அந்த மயிரிழை வேறுபாடு தான் உலகம் சர்ச்சிலை ஆதரித்ததற்கான காரணம்.
மற்றபடி மாற்றாக கருதப்படும் சீமான் , கமல் போன்றவர்களின் சுயரூபம் பலமுறை அவர்கள் வாயினாலேயே வெளிப்பட்டுவிட்டது. அதெல்லாம் இல்லை திமுகவிற்கு அவர்கள் பரவாயில்லை என்று நினைத்து அவர்களுக்கு வோட்டு போடுபவர்கள், மறைமுகமாக பிஜேபிக்கு வாக்களிப்பதற்கு சமம்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியான திமுகவிற்கு வாக்களிப்போம். இனிமேலும் அனிதாக்களை இழக்காமல் இருப்போம்.

எப்போதும் இல்லாத அளவிற்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று கூட்டம் கூட்டமாக அறிக்கைகள் வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். அதில் பலரும் பாசிச அரசை எதிர்த்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'நடுநிலைமைகள் என்று நினைத்தோம், எப்படி மாறிட்டாங்க' என்கிறார்கள். என்னை பொறுத்த வரை நடுநிலைமை என்பது ஒன்றை பற்றி தெரியாத பொழுது இருப்பது. ஒரு வழக்கை விசாரிக்கும் பொழுது நடுநிலைமையாய் இருந்து , தீர்ப்பு வழங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக