புதன், 17 ஏப்ரல், 2019

சன்னி லியோன், சீமான் & கமல்

A Sivakumar  : சன்னி லியோன், சீமான் & கமல் பார்த்தவுடன் பற்ற வைக்கும்
பதுமை. கல்யாணம் கட்டினா சன்னி லியோன் மாதிரியான ஒரு கட்டையை தான் கட்டுவேன் என்று வாலிப வயதில் அவர் நடித்த படங்களை பார்க்கும் போது தோன்றுவது யாருக்கும் இயல்பே! அப்படி தோன்றினால் தான் அது வாலிபமே!
உண்மையில் நம்மில் எத்தனை பேருக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கிறது?
நமக்கு சன்னி லியோனை பிடிப்பது இருக்கட்டும், சன்னி லியோனுக்கு நம்மை பிடிக்க வேண்டுமல்லவா?
அட, சன்னி லியோனுக்கு கூட நம்மை பிடிக்க வேண்டாம். அவரை போன்ற, அவரில் 50 சதமேனும் அழகான ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்க வேண்டுமே! வாய்ப்பிருக்கா என்று வாலிப வயதில் நாமெல்லாம் சிந்திப்பதே இல்லை. ஊரிலேயே அழகான ஒரு பெண்ணை பார்த்து, அல்லது நம் நண்பர்கள் குழுவில் பெரும்பான்மையோர் யாரை அழகு என்று சொல்லுகிறார்களோ அந்த பெண்ணை வட்டமடித்து வளைக்க முயன்று மூக்குடைபட்டோரும் உண்டு தானே?

வாலிப முறுக்கில் இருப்பதிலேயே அழகான பெண் பின்னால் சுற்றி திரிந்து, காலம் போன காலத்தில் நமக்கு கிடைத்த ஒரு சாந்தியையோ, சரளவையோ திருமணம் செய்து குழந்தை குட்டி என்று பெருவாழ்வு வாழ்வோர் தான் நம்மில் பலர்.
இது தான் வாழக்கையின் யதார்த்தம். இதில் புத்திசாலியான பெரும்பான்மையினர் சன்னி லியோனை பார்த்து ரசிப்பதோடு சரி. சன்னியை ரசிக்கும் காலத்திலேயே தனக்கு வரப்போவது சாந்தி தான் என்று உணர்ந்து வாலிபத்தை வீணடிக்காமல் படிப்பு, வேலை என்று கவனம் செலுத்தி வாழக்கையை முறைப்படுத்திக்கொள்வர். உண்மையில் அவர்களுக்கு கிடைக்கும் சாந்திகள் பேரழகியாக அமைந்து விடுவது தான் இயற்கையின் சுவாரசியம்.
இந்த, கட்டினா சன்னி லியோன் மாதிரியான ஒரு கட்டையை தான் கட்டுவேன் என்று அலைந்த கோஷ்டியின் பாடுதான் படுமோசம். சன்னி லியோனை நினைத்து வாலிபத்தை பலவழிகளில் வீணடித்து, படிப்பும் கெட்டு, சரியான முறையான வேலையும் இல்லாமல், சம்பாத்தியமும் இல்லாமல், தனக்கு கிடைத்த சரளாவோடு சந்தோசமாக குடும்பமும் நடத்த முடியாமல், வாழக்கையை தொலைத்துவிட்டு வீணாக அலைந்து கொண்டிருப்பர்.
இந்த கூட்டத்துக்கும் சீமான் கமல் என்று தேர்தல் நேரத்தில் கூப்பாடு போடுபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
எப்படி சன்னி லியோனை நினைத்து வாலிபத்தை வீணடித்தவர்கள் வாழ்க்கையை தொலைப்பது உறுதியானதோ, அதே போன்று வாழ்க்கையை தொலைப்பதற்கான உறுதியான வழி தான் இளைஞர்கள் சீமான், கமல் என்று அரசியல் பேசுவதும்.
உங்களுக்கு சந்தேகமிருந்தால் கேப்டனை நம்பி லட்சக்கணக்கில் பணத்தையும், ஆயிரக்கணக்கில் தங்கள் வாழ்நாளையும் வீணடித்தவர்களை கேட்டுப்பாருங்கள்.
விடலைகள் வெள்ளாமை வீடு வந்து சேராது என்பது எத்தனை உண்மையோ
அத்தனை உண்மை இவர்கள் வாங்க போகும் 1000, 2000 வாக்குகள் வாக்களித்தவர்களுக்கு எந்த பயனையும் தராது என்பது.
நிறைவான வாழ்க்கைக்கு தேவை சாந்திகளே தவிர சன்னி லியோன்கள் இல்லை என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மையானது அரசியலுக்கு அவசியமற்றவர்கள் சீமானும் கமலும் என்பது.
#GoBackModi என்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் எல்லாரும் Twitter-ல் Trend அடித்தால் மட்டும் பத்தாது. எப்படி Twitter-ல் தமிழகமே ஒன்று கூடி மோடியை விரட்டி அடித்து ஐஐடி மூத்திர சந்தில் ஓடவிட்டதோ அது போல வரும் 18ஆம் தேதி தமிழகமே ஓர் அணியில் நின்று ஜனநாயக பாசிச விரோத சக்திகளான அதிமுக+பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழர்கள் தமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வரை தமிழர்களுக்கான பொது எதிரி நம் அருகில் வருவதை யாராலும் பார்க்க முடியாது. காவிகளுக்கு ஒட்டுமொத்த தமிழினமும், இங்கு நிலவும் சமூக நல்லிணக்கமும், சமூக நீதியும், சம வாய்ப்பும் எதிரிகள் தான். அதை அழித்து ஒழிக்கவே அவன் இத்தனை முயற்சிகள் எடுக்கிறான் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள்.
#RejectBJP
#VoteForDMKAlliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக