செவ்வாய், 16 ஏப்ரல், 2019

சுப்பிரமணியம் சாமி : தினகரனின் அமமுக பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத்தோடு ...

1995ல அமலாக்கப் பிரிவுன்னா என்னன்னு தமிழ்நாட்டுக்கு அறிமுகப் படுத்துனதே டிடிவி தினகரந்தான்
சாவித்திரி கண்ணன் : ’’பா ஜ கவை எதிர்ப்பதில் நான் தான் தமிழகத்தில் நம்பர் ஒன்’’ என்கிறார்!
ஆனால், சுப்பிரமணியசாமி என் மரியாதைக்குரிய நண்பர் என்கிறார் .சு.சாமியும்,’’ தினகரனுக்கு போடும் ஒட்டு தேசத்தை காப்பாற்றும் ஓட்டு’’ என்கிறார்.
’’ஒட்டுமொத்த இந்தியாவே பா ஜ கவை வெறுக்கிறது’’ என்று பேட்டியளிக்கிறார். ஆனால்,’’மோடிக்கு கறுப்புக் கொடியெல்லாம் காட்டக் கூடாது..’’ என பதற்றமடைகிறார்..!
குடியரசு தேர்தல் நடந்த போது ,தனது ஆதரவு 18 எம் எல் ஏக்களின் வாக்குகளயும் தருவேன் என பா ஜ க வேண்டுகோள் வைக்கும் முன்பே முந்திக் கொண்டு ஆதரிக்கிறார்.!
’’நான் தான் பெரியார்,அண்ணா திராவிட வழி இயக்கத்தின் தொடர்ச்சி’’ என்கிறார்.ஆனால், பி பி சி பேட்டியில் பிராமணர்களை புகழ்ந்து பேசி ஐஸ் மழை பொழிகிறார்.
’பெரா’ வழக்கில் உள்ளே இருக்க வேண்டியவரை சுதந்திரமாக நடமாடவிட்டிருப்பதோடு, இந்த தேர்தலில் அ ம மு கவின் பண வினியோகத்தை பா ஜ க கண்டு கொள்ளாமல் அனுமதித்தது..!

பா ஜ க வட்டாரத்தில் விசாரித்தால்...’’ எங்கள் முதல் எதிரி இங்கே தி மு க தான்! அதற்கு சரியான எதிர்ப்பரசியல் பண்ணும் தகுதி தினகரனுக்குத் தான் உண்டு..எங்காத்து பெண்ணாண்ட பாலிடிக்ஸ்ல டிரையினிங் எடுத்தவராச்சே ....! ’’ என புல்லரிக்கிறார்கள்.
என்ன வேண்டுமானலும் செய்வேன்,எதையும் எதிர் கொண்டு அச்சமின்றி பேசி சிரித்து சமாளிப்பேன்.பணத்தால் யாரையும் விலைக்கு வாங்கமுடியும்...எந்த ஒரு அறநெறிக்கும் கட்டுப்படமாட்டேன்.... என்பது மாதிரியாகச் செயல்படுவரை.., எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக தலைவராக .அடையாளம் காட்டும் முயற்சிகளும், தந்திரங்களும் அரங்கேறி வருவதை பல தளங்களிலும் காண்கிறேன்.
இதில் சமுதாயத்தில் மிக மரியாதைக்குரியவர்களாக பார்க்கப்படுகிற சிலரும் ரகசியமாக சம்பந்தப்பட்டுள்ளனர்.தற்போதைக்கு ஒருவரை மட்டும் அடையாளம் காட்டுகிறேன்.
பாரம்பரியமான தமிழ் தினப்பத்திரிகையின் ஆசிரியரும், இன்றைய தமிழக இலக்கியவாதிகளால் விரும்பி அழைத்து மேடையேற்றப்படுபவருமான மணியான ஆசிரியர் தினகரனுக்கும் பா ஜ கவுக்குமிடையே உறவுப்பாலமாக இயங்குவதை மிகப் பெருமையாக தன் வட்டாரத்தில் பேசி புளகாங்கிதம் அடைகிறார்...!
மிக,மிக விழிப்புணர்வோடு இருக்கவேண்டிய காலகட்டமிது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக