செவ்வாய், 9 ஏப்ரல், 2019

சிவனடியார் ஆறுமுகசாமி ஐயா மறைந்த தினம் இன்று.

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் கடந்த 8.04.2017 அன்று மதியம் இயற்கை எய்தினார்.
Sivasankaran Saravanan : சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுதும் போராடிய ஐயா ஆறுமுகசாமி தனது 94 வது வயதில் ஈராண்டுகளுக்கு முன்பு காலமானபோது எழுதியது:
புகழ்பெற்ற ஆலயங்களை கபளீகரம் செய்யும் பார்ப்பன கும்பல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தையும் விட்டுவைக்கவில்லை. தீட்சிதர்கள் எனப்படும் ஐயர்கள் தமிழை ஒழித்து சமஸ்கிருதத்தில் வழிபாட்டை கொண்டுவந்தனர். ஆறுமுகசாமி தேவாரம் திருவாசகம் நடராசர் முன்பாக பாடவேண்டும் என வலியுறுத்தியபோது தேவாரம் பாடிய மூவரே கருவறையில் நுழையவில்லை, பார்ப்பனர்களுக்கு மட்டுமே கருவறையில் நுழைய பாத்தியதை உண்டு என சாதியவாதம் பேசினார்கள். 2000ம் ஆண்டு திமுக,விடுதலைச்சிறுத்தைகள், ம க இ க போன்றவற்றின் ஆதரவோடு சிதம்பரம் ஆலயத்தில் தமிழில் தேவாரம் பாட முற்பட்ட ஆறுமுகசாமி ஐயாவை கையை முறித்து மேடையிலிருந்து தள்ளிவிட்டார்கள் .

சிதம்பரம் நடராசர் ஆலயம் தீட்சிதர்கள் கையிலிருந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரவேண்டும் என போராடினார் ஆறுமுகசாமி. 2009 ம் ஆண்டு உயர்நீதிமன்றம் சிறப்புமிக்க அந்த தீர்ப்பை வழங்கியபோது திமுக அரசு தந்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் ஆலயத்தில் தமிழ் ஒலித்தது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ வாக இருந்த ரவிக்குமார் கோரிக்கையை ஏற்று முதல்வர் கலைஞர் ஆறுமுகசாமி ஐயாவுக்கு மாதம் 3000 ரூபாய் அரசாங்க நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
தமிழக அரசுக்கு ஆதரவான தீர்ப்பைக்கண்டு வெகுண்டெழுந்த பார்ப்பனர்கள் எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா வை போயஸ் தோட்டத்தில் சென்று சந்தித்து முறையிட்டார்கள் . சுப்பிரமணியசாமி துணையுடன் வழக்கு உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுக்கு சென்றது. 2011ல் அதிமுக ஆட்சி வருகிறது. 2014 ல் உச்சநீதிமன்ற தீர்ப்பு பார்ப்பனர்களுக்கு சாதகமாக வருகிறது.
அந்த 2014 ல் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சொன்ன நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா ? தான் ஓய்வு பெறுகிற அந்த சமயத்தில் தனக்கு புண்ணியம் தேடிக்கொள்ளும் வகையில் சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதை தடை விதிப்பதாக கூறினார். அன்று அப்படி சொன்ன நீதிபதி யைத்தான் ஓய்வு பெற்ற பிறகு மோடி அரசு அவரை சட்ட கமிசனுக்கு ஆணையராக நியமித்துள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை இந்துமக்களின் விருப்பப்படி தமிழில் தேவாரம் பாட முயன்ற சிவனடியாரை அவமானப்படுத்தி இறை வழிபாட்டை தடுத்தது மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இந்து மதத்தில் சிறுபான்மையாக இருந்துகொண்டு பெரும்பான்மை இந்து மக்களை கேவலமாக நடத்துகிற கூட்டம் தான் இதனை செய்தது.
தமிழர்களின் கலை , கலாச்சாரம் , பண்பாடு , வழிபாடு என எல்லாவற்றிலும் அடக்கி ஒடுக்க நினைக்கும் பாஜகவிற்கு இந்த தேர்தலில் மரண அடி கொடுப்பதே தமிழர்களாகிய நமக்கு பெருமை தரக்கூடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக