செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ஆசிரியர் கி.வீரமணி மீது மீண்டும் தாக்குதல்!

கி.வீரமணி மீது மீண்டும் தாக்குதல்!மின்னம்பலம் : திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது போன வாரம் திருச்சியில் தாக்குதல் முயற்சி நடந்தது. இந்த வாரம் அவரது கார் கண்ணாடி திருப்பூரில் உடைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பொள்ளாச்சி சம்பவத்தின் முன்னோடி கிருஷ்ணர்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வீரமணிக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டன. மேலும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சியில் கி.வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தி.கவினர் மீது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கற்களையும் செருப்பையும் வீசித் தாக்குதல் நடத்தினர். இதற்கு திருமாவளவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு திமுக தலைவரான ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 8) இரவு மீண்டும் திருப்பூரில் கி.வீரமணி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து பேச திராவிடர் கழகம் சார்பில் நேற்று இரவு திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கி.வீரமணியை ஒரு காரில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் செல்வராஜ் அழைத்து சென்றார். அந்தக் கார் பொதுக் கூட்ட இடம் அருகே சிலர் வீரமணிக்கு எதிராக திடீரென்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது கி.வீரமணி வந்த கார் மீது கல் வீசப்பட்டது. காரின் முன் கண்ணாடி உடைந்தது. இதில் வீரமணி அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றித் தப்பினார்.
தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வீரமணி கார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள். இரு தரப்பினரும் மோதலுக்குத் தயாராக, போலீஸார் தடியடி நடத்தின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக