செவ்வாய், 9 ஏப்ரல், 2019

சிதம்பரம் : 4 கோடியே 70 லட்சம் வேலை வாய்ப்புக்களை பாஜக ஆட்சில் இந்தியா இழந்திருக்கிறது வீடியோ


ரயில்வே கடைநிலை ஊழியர்களுக்கான (கலாசி) வேலைவாய்ப்புக்கள் : 64 ஆயிரம் இடங்கள்!
விண்ணப்பித்தவர்கள் தொகை 82 இலட்சம் பேர்!
அதில் 4 இலட்சத்தி 27 ஆயிரம் பேர் பொறியியல் பட்டதாரிகள் .B.E, B.Tec..
இதில் 47 ஆயிரம் பேர் முதுகலை (Masters Degree).
என் கண்ணிலே ரத்த கண்ணீர் வடிகிறது! இந்த நிலைக்கு இந்திய நிலையை தள்ளியது பாஜக அரசு .47 ஆண்டுகளிலே இல்லாத வேலைவாய்ப்பு இன்மை இன்று நிலவுகிறது.
இந்த அரசு அறிக்கையை மறைக்க பார்த்தார்கள் . குழி தோண்டி புதைக்க பார்த்தார்கள்
இரண்டு மானமுள்ள அதிகாரிகள் ,திரு மோகனன் ,திரு மீனாட்சி இந்த அரசு மறைக்க முயற்சித்ததை எதிர்த்து பதவி விலகினார்கள்
இன்று அறிக்கை கசிந்திருக்கிறது .
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவேன் என்ற மோடி அதை செய்யவில்லை .மாறாக 4 கோடியே 70 லட்சம் வேலை வாய்ப்புக்களை இந்திய நாடு இழந்திருக்கிறது
தமிழ் நாட்டில் மட்டும் பணமதிப்பு இழப்பினாலும் ஜி எஸ் டி வரியினாலும் 50 ஆயிரம் சிறு குறு தொழில்கள் அழிந்தன .அதனால் 5இலட்சம் பேர் வேலை இழந்தார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது ............ ப.சிதம்பரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக