சனி, 23 மார்ச், 2019

டெல்லியில் இந்து பயங்கரவாதிகள் முஸ்லிம் குடும்பத்தை பாகிஸ்தானுக்கு போகுமாறு அடித்து வீடியோ


பாகிஸ்தானுக்கு போங்க.. குழந்தை, பெண்கள் என பாராமல் முஸ்லிம் குடும்பத்தை அடித்து உதைத்த கும்பல்
Vishnupriya R : டெல்லி: குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தை  பாஜகாவை சேர்ந்த  35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்தனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் போண்ட்ஸி பகுதியில் நேற்று 4 முஸ்லிம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் 35-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்தனர். அவர்கள் கையில் ஹாக்கி குச்சி, இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டைகள் ஆகியவற்றை கொண்டு அனைவரையும் தாக்கினர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவரையும் அவர்கள் தாக்கினர்.
மேலும் அவர்களை கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு செல்லுமாறும் அந்த கும்பல் அவர்களை விரட்டியடித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் இந்த தாக்குதல் முரட்டுத்தனமானது. கண்டிக்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் பாஜக நடத்தும் நாடகம் என்பதால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர். tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக