வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

தவிடுபொடி ஆகி இருக்கும் சென்னையின் பூர்வகுடி மக்கள் வீடுகள்... பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு முன்னால்..

கவிதா சொர்ணவல்லி : சென்னை எப்போதுமே ஆந்திராக்காரர்களின் யின் முக்கியப்பகுதிகள் இன்று "வடஇந்தியர்களின்" முழு வசமாகி விட்டதை யாரெல்லாம் அச்சத்துடன் கவனித்திருக்கிறீர்கள் / றீர்கள்.
கைவசம்தான். கேட்டால், "சென்னப்பநாயக்கர்களின் ஆளுகையில் இருந்த சென்னையை" என்று ஒரு வரலாறு வரும். இருக்கட்டும். ஆனால், சென்னை
எக்மோர், புரசைவாக்கம், அமிஞ்சிக்கரை என்று அந்தப்பகுதி முழுவதுமே, முழுவதுமே வடஇந்தியக்காரர்களின் கைப்பிடிக்குள் சுருங்கிவிட்டது. குறிப்பாக ஜெயின் சமூகத்தினர். சந்துபொந்தில் இண்டு இடுக்கிலிருந்தெல்லாம் அவர்களின், கேட்டட் கம்யூனிட்டி" கட்டிடங்கள், வானுயர எழுந்து நின்று கொண்டிருப்பதை / நிற்பதை/ பார்கிறேன். ஒவ்வொரு வாரமும், ஏதாவது ஒரு வானுயர்ந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்படுவதும், ஆறு மாதங்களில் அது பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதுமாக,அப்பகுதிகளே அந்நியமாகி வருகிறது. (அந்த gated community-ற்குள் கருப்பான ஆட்கள் நுழைந்தால், அது ஏழாவது அதிசயம்)

சில நாட்களுக்கு முன், கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனை எதிரே வசித்த அப்பகுதியின் பூர்வகுடி மக்களை ( தலித் மக்களை) ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எந்த முன்னறிவிப்பும் இல்லாது, அகதிகளைப் போல தூக்கித்தூர எரிந்தது அதிமுக அரசு. கடந்த எட்டு வருடமாக, எக்மோர் பகுதியில்தான் என் அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் அம்மக்களை கடந்துதான் அலுவலகம் சென்றுரிக்கிறேன். வெறும் பார்வையாளனான எனக்கே, அந்தக்குடிசைகளை வலுக்கட்டாயமாக அகற்றியபோது பதறியது. பூர்வகுடிகளின் உணர்வை என்னால் விவரிக்க இயலவில்லை.
இப்போது புளியந்தோப்பு. நேற்று காலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போலிஸ் துணையோடு குடிசைகளை இடித்து அகற்றி மக்களை நடுத்தெருவில் விட்டிருக்கிறார்கள் அதே அதிமுக அரசு. சாலையில் பொருள்களோடு மக்கள் யாருக்கோ காத்திருந்திருக்கிறார்கள். யாருக்காக என்றுதான் தெரியவில்லை. குடிசை மாற்று வாரியம் என்பது வேறு. ஆனால், தங்களின் இருப்பிடத்தில் இருந்து பூர்வகுடிகள் பிய்த்து எறியப்படுவது வேறு. ஊடகங்களோ வெறும் "குடிசைகளை அகற்றுவதாக" மட்டுமே கடந்து போகிறது. வாழ்விடங்களில் இருந்து துரத்தப்படுபவர்களின் வலியை பெரும்பான்மை சமூகம் என்று உணர்ந்து கொள்ளும் என்று தெரியவில்லை.
எந்த வடநாட்டுக்காரனுக்கு குடை பிடிப்பதற்காக சென்னையின் பூர்வகுடி மக்களை அவர்களின் இருப்பிடத்தை, அவர்களின் வாழ்வை இவர்கள் அழிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு தேர்தல் வரும். மீண்டும் பணம் அள்ளி வீசப்படும். ஆத்திரத்தை தொலைத்துவிட்டு அதே அரசுகளுக்கு வாக்களித்து கடமையை ஆற்றுவோம்.
ps: பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு முன்னால் தவிடுபொடி ஆகி இருக்கும் சென்னையின் பூர்வகுடி மக்கள் வீடுகளைப்பற்றிய இந்த ஒரு புகைப்படம் போதும். இதுவும் ஒரு இனஅழிப்புதான். அதற்க்கு கேவலமான சாட்சிகளாக நாம் இருக்கப் போகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக